பொது செய்தி

இந்தியா

உறவு பாதிக்கப்படும்: கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் எனவும், இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
India, Trudeau,  Farmers,Agitation, canada,

புதுடில்லி: பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் எனவும், இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நாளையும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள் கனடாவில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவிற்கான கனடா தூதரை வரவழைத்த மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அந்நாட்டு எம்.பி.,க்கள் தெரிவித்த கருத்துகள் ஏற்று கொள்ள முடியாதவை. இது போன்று, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அது இந்தியா - கனடா இடையிலான இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும்.


latest tamil news
கனடா தலைவர்களின் கருத்துகள், அங்குள்ள இந்திய தூதரகம் முன்னர் பிரிவினைவாதிகள் போராட்டத்தை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம், ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இந்திய தூதரக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு தலைவர்கள் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-202000:28:22 IST Report Abuse
Ramki கனடா இஸ்லாமிய நாடுகளிலிருந்து குடியிறக்க சட்டத்தில் மதவாத, பிரிவினைவாதிகளை வரவழைத்து குடியமர்த்தி, தற்போது பிரான்ஸ் அனுபவிப்பது போல குண்டு வெடிப்பு சம்பவங்களை சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று உணர்வார்கள் , பிரிவினைவாதம் ,தீவிரவாதத்தினால் ஏற்படும் வலி என்ன என்பதனை.
Rate this:
Cancel
04-டிச-202023:53:39 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இவரும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை நம்பி நாட்டை அழிவு பாதைக்குள் இட்டு செல்லும் மற்றுமொரு கோமாளி மோடி ஆட்சியில் இந்துக்கள் விழித்துக்கொண்கொண்டு பப்புவை தூக்கி ஏறிந்ததுபோல் இவருக்கும் நடக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துமத விரோதி சுடலை கானையும் இந்துக்கள் தோற்கடிப்பார்கள்
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
04-டிச-202022:31:18 IST Report Abuse
Modikumar தமிழ் நாட்டுக்கு உளறுவாய் சுடலை மாதிரி கனடாவுக்கு இந்த ஜஸ்டின் ரூட்டோ, கனடாவில் வாழும் சீக்கியர்களின் அரசியல் ஒட்டு வங்கிக்காக சுடலை அண்ட் கோ மாதிரி ஓட்டுக்காக எதுல கிடந்தாலும் எடுத்து வாயிலவெச்சுக்கற ரகம் ராகம் தான் இந்த கனடா பிரதமர். சமயம் பாத்து தன் இந்திய வெளியுறவு துறை வேலையை கான்பிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X