ஊட்டி:ஊட்டியில், 'விடியலை நோக்கி ' தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க., மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி பங்கேற்றார். முன்னதாக, குன்னூரில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டிற்கு சென்றார்.
அருவங்காடுவெடிமருந்து தொழிற்சாலை பொது மேலாளர் முன்னிலையில் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து, ஊட்டிக்கு செல்லும் போது, கேத்தி அருகே அரக்காடு பகுதியில், தேயிலை பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
ஊட்டி வந்த கனிமொழி சேரிங் கிராசில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தனியார் ஓட்டலில் தோடர் மக்களின் குறைகளை கேட்டதுடன், மகளிர் அணியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், நிருபர்களிடம் கூறுகையில்,"
தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை. 'நிவர்' புயல் மற்றும் தற்போதைய புரெவி புயல் காலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அரசு செயல்பாடு சரியாக இல்லை. ரஜினி அரசியல் பிரவேசத்தால் தி.மு.க., வெற்றி பாதிக்காது. யார் கட்சி தொடங்கினாலும் தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க .,ஆட்சியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லை .
நீலகிரி மாவட்ட விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு நல்ல விலை நிர்ணயம் செய்வதிலும், மாவட்ட மக்கள் உயர் கல்வி பயில வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலையை சரி செய்ய அரசு தவறிவிட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீலகிரி மாவட்டத்தில் தற்போதுள்ள கட்டட தடை சட்டம் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தபடும், ஸ்திரமற்ற நிலையில் உள்ள சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE