சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அம்மா உணவகத்தில் தரமில்லை!'

Added : டிச 04, 2020
Share
Advertisement
'அம்மா உணவகத்தில் தரமில்லை!'காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' தொழில் பூங்காவில் உள்ள, திறன் மேம்பாட்டு மையத்தை, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.அங்கு நடந்த விழாவில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிப்காட் பகுதியில், 'அம்மா' உணவகம் அமைக்க வேண்டும் உட்பட, 11
 பக்க வாத்தியம்

'அம்மா உணவகத்தில் தரமில்லை!'

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' தொழில் பூங்காவில் உள்ள, திறன் மேம்பாட்டு மையத்தை, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.அங்கு நடந்த விழாவில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிப்காட் பகுதியில், 'அம்மா' உணவகம் அமைக்க வேண்டும் உட்பட, 11 கோரிக்கைகளை முன்வைத்தனர்.அமைச்சர் சம்பத் பேசுகையில், 'உணவு தரமாக கொடுக்க வேண்டும் என்பதால், சிப்காட்டில், 'அம்மா' உணவகம் சரி வராது...' என்றார்.இதைக் கேட்ட, மூத்த நிருபர் ஒருவர், 'அம்மா உணவகத்தில், உணவு தரமாக இல்லைன்னு, அமைச்சரே ஒத்துக்கிறாரே... அரசின் நிர்வாக லட்சணத்தை இப்படி போட்டு உடைச்சிட்டாரே...' என்றதும்,
சுற்றியிருந்தோர் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X