அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : டிச 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
டிச., 5, 2016கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை எனும் ஊரில், 1948 பிப்., 24ம் தேதி பிறந்தவர், ஜெ.ஜெயலலிதா. இயற்பெயர், கோமளவல்லி. தன் தாயுடன், சென்னையில் குடியேறினார். சின்னடா கொம்பே என்ற கன்னடப் படத்தின் மூலம், சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழில், அவருக்கு முதல் படம், வெண்ணிற ஆடை.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில், 140 படங்களில்


இதே நாளில் அன்று

டிச., 5, 2016

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை எனும் ஊரில், 1948 பிப்., 24ம் தேதி பிறந்தவர், ஜெ.ஜெயலலிதா. இயற்பெயர், கோமளவல்லி. தன் தாயுடன், சென்னையில் குடியேறினார்.
சின்னடா கொம்பே என்ற கன்னடப் படத்தின் மூலம், சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழில், அவருக்கு முதல் படம், வெண்ணிற ஆடை.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில், 140 படங்களில்
நடித்திருக்கிறார்.அ.தி.மு.க.,வில் இணைந்து, கொள்கைப் பரப்புச் செயலரானார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் நடந்த அரசியல் சதுரங்கத்தில் வெற்றி பெற்று, கட்சியின் பொதுச் செயலரானார். 1991, 2001, 2011, 2016ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பு வகித்தார்.
உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், 2016 டிச., 5ம் தேதி, தன், 68வது வயதில் உயிரிழந்தார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
05-டிச-202016:51:26 IST Report Abuse
karutthu கூடா நட்பு கேடாய் வரும் என்பதுபோல் ஒரு மாயவலையில் சிக்கி நீதிமன்றமே குற்றவாளி என தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது ..அவர்கள் சினிமாவில் சம்பாதிக்காத பணமா ?என்ன அறிவு ஆங்கிலத்தில் புலமை, கட்டுப்பாடுடன் கட்சியை வளர்த்தவர் பாலூட்டும் அறையை பஸ் நிலையம் ,ரயில் நிலையத்தில் அமைத்தார் தொட்டில் குழந்தை திட்டம் இப்படி ஏகப்பட்டவை சொல்லிக்கொண்டேபோகலாம் ...அவர் இழப்பு ...வருத்தம் தருகிறது
Rate this:
Cancel
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
05-டிச-202010:10:07 IST Report Abuse
Muthiah.G உலகம் இருக்கும் வரை, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-டிச-202008:09:29 IST Report Abuse
Bhaskaran அமரேஷில்பி ஜக்கணாச்சார்யா .என்றதெலுங்குப்படம் அதில் ஒருநடனக்காட்சிதான் முதலில் நடித்துள்ளார் என்று தகவல் உண்டு .அது தமிழில் சிற்பியின் செல்வன் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X