அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்களை வசைபாடாத நாளே கிடையாது: ஸ்டாலின் மீது ஆதங்கம்

Updated : டிச 06, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (16+ 13)
Share
Advertisement
மதுரை:''தமிழக அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தேர்தலை மனதில் வைத்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்களை வசைபாடாத நாளே கிடையாது,'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.வாடிக்கைமதுரையில் நேற்று நடந்த அரசு விழாவில், 1,295 கோடி ரூபாயில், பெரியாறு அணை குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து
ஸ்டாலின், முதல்வர், முதல்வர் பழனிசாமி, பழனிசாமி ,  ஆதங்கம்

மதுரை:''தமிழக அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தேர்தலை மனதில் வைத்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்களை வசைபாடாத நாளே கிடையாது,'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.


வாடிக்கைமதுரையில் நேற்று நடந்த அரசு விழாவில், 1,295 கோடி ரூபாயில், பெரியாறு அணை குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தும், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:இந்த அரசு, எந்த திட்டத்தை அறிவித்தாலும், உடனுக்குடன் அமல்படுத்தி மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கிறது. மதுரை நகரில் மேலும் பல திட்டங்கள் நடக்கின்றன. இதை பத்திரிகையாளர்கள் பார்க்கின்றனர்.ஆனால், எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. பார்க்கும் பார்வையில் கோளாறா, மனதில் கேளாறா என தெரியவில்லை. 'இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. இந்த ஆட்சி தண்ட ஆட்சி' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

வெளியில் வந்து பார்த்தால் தானே, இவை கண்களுக்கு தெரியும். அறைக்குள் உட்கார்ந்து பார்த்தால், அறை மட்டும் தான் தெரியும். ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி நாங்கள் செயல்படுகிறோம்.ஆனால், வேண்டும் என்றே திட்டமிட்டு, ஏதாவது பழி சுமத்துவது தான் இவரது வாடிக்கை. இவர் என்ன செய்ய போகிறார் என சொல்லவில்லை. செய்பவர்களையும் பாராட்ட மனம் கிடையாது.அரசில் நிறைவேற்றப்படுகிற திட்டங்களை, நாங்கள் புள்ளி விபரங்களுடன் கூறுகிறோம். ஏதாவது பிரச்னை இருந்தால் கூறுங்கள். அதற்கு பதில் கூற தயார். இரவு பகல் பாராது அமைச்சர்கள் செயல்படுகின்றனர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.


ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும்சிவகங்கையில் நேற்று, முதல்வர், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:நடிகர் ரஜினி, கட்சி துவங்கி பதிவு செய்யட்டும். ஆரம்பிப்பதற்கு முன் கருத்து சொல்வது நல்லதல்ல. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன் கருத்தை கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்; தப்பில்லை.முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம், என தெரிவித்துள்ளார். 2 ஜி ஊழல் உலகறிந்த விஷயம். ராசாவை குற்றமற்றவர் என நீதிமன்றம் கூறவில்லை.

சி.பி.ஐ., போதிய ஆவணங்களை வழங்கவில்லை எனக் கூறியே விடுவித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நடந்து வருகிறது. அதன் பின் அவர் எங்கிருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.வரும், 2026ல் ஆட்சி அமைக்கும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாக பா.ஜ., கூறுவது குறித்து கேட்கிறீர்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில், என் தலைமையில் அ.தி.மு.க., அரசு அமையும், என பேசினேன். அவர் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.
இவ்வாறு, அவர் கூறினார்.


ஸ்டாலின் நாடகம்துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:அரசு சாதனைகளை கண்டு, ஸ்டாலின் புலம்புகிறார். மக்களை சந்திக்க பயந்து, பூட்டிய அறைக்குள் கணினி முன் அமர்ந்து, அரசியல் செய்கிறார்.மீத்தேன் திட்டத்தில் 2011 பிப்., 4ல் கையெழுத்திட்டவர் ஸ்டாலின். தஞ்சாவூர் தரணியை பாலைவனமாக்க கையெழுத்து போட்டு விட்டு, தற்போது நடிக்கிறார். ஸ்டாலின் பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள்.மக்களை ஏமாற்றும் ஸ்டாலினின் போலி அரசியல் எடுபடாது. ஸ்டாலின் கனவு பலிக்காது. 2021 தேர்தலுக்கு பிறகும், இந்த ஆட்சி தொடரும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (16+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
06-டிச-202003:23:06 IST Report Abuse
ocean அதிமுக ஆட்சி மீது சுமத்தும் குற்றச்சாட்டு களுக்கமான கரும்புள்ளி விவரங்களை ஏதோ இவர்கள் தான் அவைகளை நேரிலிருந்து பாரத்தது போல் வாழை மரத்திலும் முருங்கை மரத்திலும் செருகி பிளக்க கூட லாயக்கற்ற ஆப்பும் ஏதுமற்ற வெற்றிடத்தில் கோவணத் துண்டில் கொடி கட்டி எதையோ வென்று விட்டதாக கூவி பந்தா காட்டும் திமுக அல்லகையும் பரப்புவதை வழக்கமாக செய்வதற்கு கவர்ன்மெண்டில் வேலை பார்த்தபடி எவனோ ஒரு இன்ஃபார்மர் திமுக கைக்கூலி துணை போகிறான். அரசு பேரை கெடுக்க இவர்களுக்கு தவறான தகவல் களை தந்து கொண்டிருக்கும் அந்த திமுகவின் கறுப்பு ஆட்டை கண்டு பிடித்து போலீஸ் காவலில் வைத்து முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்.
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
05-டிச-202012:19:41 IST Report Abuse
Nithya அவங்களும் பொழப்பு நடத்தனுமே... இல்லையெனில் மக்கள் மறந்து விடுவர்
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-டிச-202013:18:10 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்ஐபிஎல் தொடரில் அதானி அணி அமித் ஷா மகனுக்கு முக்கியப் பதவி: வரும் 24-ல் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு .. எல்லோரும் கேட்டுக்கங்க பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. பாஜகவினருக்கும் எந்தவொரு தொழிலதிபருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பாஜக கார்பொரேட்களை எந்தவிதத்திலும் தூக்கிவிடுவதில்லை....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-டிச-202008:13:11 IST Report Abuse
Bhaskaran ஒட்டகங்களில் பயணிகள் பயணித்துக்கொண்டுதான் இருப்பார்கள் இது அரேபிய பழமொழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X