அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி வியூகம்: தி.மு.க.,வில் கலக்கம்

Updated : டிச 06, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (107)
Share
Advertisement
வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி களமிறங்கும் சூழல் உருவாகி உள்ளதால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற கலக்கம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.ஜனவரி மாதம் கட்சி துவங்கப் போவதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். வரும், 31ல், கட்சியின் பெயர், கொடி போன்ற விபரங்களை வெளியிடவும், அவர் தயாராகி வருகிறார்.'மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்; இப்போ இல்லேன்னா எப்போதும்
ரஜினி வியூகம், திமுக, கலக்கம்

வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி களமிறங்கும் சூழல் உருவாகி உள்ளதால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற கலக்கம், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் கட்சி துவங்கப் போவதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். வரும், 31ல், கட்சியின் பெயர், கொடி போன்ற விபரங்களை வெளியிடவும், அவர் தயாராகி வருகிறார்.'மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்; இப்போ இல்லேன்னா எப்போதும் இல்ல; தமிழகத்தின் தலையெழுத்தை மாத்துற நாள் வந்தாச்சு' என்பது உள்ளிட்ட, 'பஞ்ச்' வசனங்களுடன், ரஜினி, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளார்.

கட்சி துவக்கும் அறிவிப்பை, ரஜினி வெளியிட்டதும், அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் உற்சாகம் அடைந்துள்ளன.ஆனால், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி தலைமையில், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட, வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க., - தி.மு.க., - ரஜினி அணி என, மும்முனை போட்டி ஏற்படும் நிலை வரலாம்.
அப்போது, ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை, மொத்தமாக அறுவடை செய்யலாம் என்ற, தி.மு.க.,வின் திட்டம் பலிக்காமல் போகும். ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களில் ஒரு பங்கை, ரஜினி கைப்பற்றலாம்.

இதனால், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற அச்சம், அக்கட்சியில் நிலவுகிறது.
அதே நேரத்தில், தி.மு.க.,வில் ஓரம் கட்டப்பட்டவர்களும், ஒதுங்கியிருப்பவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினி கட்சியில் சேர, தூது விட்டு வருகின்றனர். இதுவும், தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, தெரிகிறது.இதுவரை, தி.மு.க.,வுக்கு ஓட்டு அளித்து வந்துள்ள ஹிந்துக்கள், ரஜினி கட்சிக்கு ஓட்டு போடும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.

தி.மு.க., வில் உள்ள, ரஜினி ரசிகர்களின் ஓட்டுக்களையும், அக்கட்சி இழக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.இதுபோன்ற காரணங்களால், ரஜினி வரவால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம், தி.மு.க.,வினரிடம் காணப்படுகிறது.

- நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
12-டிச-202012:26:11 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . திமுகவின் பேரை சொல்லாமல் தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்தமுடியாது
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
11-டிச-202005:16:54 IST Report Abuse
SexyGuy . ரஜினி தமிழ்நாட்டுக்கு பொழைக்க வந்த ஆள். அவர் போல் நெறைய வருவார் , போவார். அவர் தனி மனிதன். தி.மு.கா. ஒரு கொள்கை, சித்தாந்தம். தமிழர் முன்னேற்றம் என்ற காரணங்களால் உருவாக்கப்பட்டது. ஆகா இந்த கட்சி தமிழ்நாட்டில் ஜாதிகள், ப்ராஹ்மணர்கள் உள்ளவரை இருக்கும். இது நான் யாரையம் புண்படுத்த சொல்லவில்லை.
Rate this:
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
10-டிச-202018:49:30 IST Report Abuse
Ramshanmugam Iyappan அணைத்து மாநில கட்சிகளுக்கும் ஒருவித பயத்தை ஏற்படுத்திவிட்டார் மாண்புமிகு திரு ரஜினி அவர்கள், இதுதான் அவரது முதல் வெற்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X