தமிழ்நாடு

கடலுாரில் காட்டு காட்டு என காட்டியது கன மழை

Added : டிச 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார்:'புரெவி' புயல் தாக்கம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டியதால், மாவட்டம் முழுதும் வெள்ளக்காடானது. மழை நீர் பெருக்கெடுத்து ஒடுவதால், மூன்று இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேற்கில் உள்ள, 15 மாவட்டங்களுக்கு வடிகால் மாவட்டமாக,
 கடலுாரில் காட்டு காட்டு என காட்டியது கன மழை

கடலுார்:'புரெவி' புயல் தாக்கம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டியதால், மாவட்டம் முழுதும் வெள்ளக்காடானது. மழை நீர் பெருக்கெடுத்து ஒடுவதால், மூன்று இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கில் உள்ள, 15 மாவட்டங்களுக்கு வடிகால் மாவட்டமாக, கடலுார் உள்ளது. இம்மாவட்டத்தில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுக்தாறு மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன.சமீபத்தில், 'நிவர்' புயல் காரணமாக, கடலுார் மாவட்டத்தில், பெரியளவில் மழை பெய்யவில்லை. தற்போது, வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில், எதிர்பாராத வகையில் மழை கொட்டியது.

கடந்த மூன்று நாட்களாக, கடலுார் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் துவங்கி, விடிய விடிய பெய்த மழையால், மாவட்டம் முழுதும் வெள்ளக்காடானது. மாவட்டத்திலேயே, சிதம்பரம் பகுதியில், ஒரே நாளில் 34 செ.மீ., மழை பெய்தது. இதனால், நேரு நகர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர்., நகர் உட்பட, 700 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.வீராணம் அருகே, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.மாவட்டம் முழுதும், 600 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.


துண்டிப்பு

கடலுார் - சிதம்பரம் சாலையில், சிப்காட் அருகே சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சில மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வடலுார் - சேத்தியாதோப்பு சாலையில், மருவாய் என்கிற இடத்தில் சாலையில், 3 அடிக்கு மேல் தண்ணீர் ஓடுவதால், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.ஆலப்பாக்கம் - குள்ளஞ்சாவடி சாலையில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


லக்கம்

கடலுார் மாவட்டத்தில் ஆலப்பாக்கம், குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள பகுதிகள், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, விருத்தாசலம் பகுதியில் 1.50 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். 32 ஆயிரம் பேர்விடிய விடிய பெய்த கன மழை காரணமாக பல இடங்களில், குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாவட்டம் முழுதும், 180 முகாம்களில், 32 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்த முள்ள, 228 ஏரிகளில், 90 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான, 47.50 அடியில் நேற்று, 45 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. பாதுகாப்பு கருதி 4,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


சுரங்கப் பணி பாதிப்பு

நெய்வேலியில், 22 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இங்குள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் விரிவாக்கப் பகுதியை சுற்றியுள்ள கத்தாழை, கரிவெட்டி, முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில், மழை நீர் பெருமளவில் தேங்கியுள்ளது.நெய்வேலியை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழை நீர் முழுதும் பரவனாறு வழியாக வாலாஜா மற்றும் பெருமாள் ஏரியை சென்றடையும். பரவனாறு, இரண்டாம் சுரங்கம் வழியாக செல்வதால், பெருமளவு மழை நீர், 200 அடி ஆழமுள்ள, நிலக்கரி சுரங்கங்களுக்குள் பாய்ந்து விடுகிறது.

இதனால், சுரங்கங்களில் மேல்மண் நீக்கம் மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து, மழை நீர் வெளியேற்றுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.நெய்வேலி சுரங்கத்தில் நிரம்பிய தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பரவனாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

கொளக்குடி காலனியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் மற்றும் போலீசார் ரப்பர் படகு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் கிராமத்திற்கு சென்று, மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.என்.எல்.சி., உயரதிகாரிகள் கண்காணிப்பில், 20க்கும் மேற்பட்டோர், நிலக்கரி சுரங்கங்களில், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202012:40:35 IST Report Abuse
ஆப்பு முன்னாடியெல்லால ஆறுன்னா மணலுடன் இருக்கும். மழை நீர் உள்ளிழுக்கப் பட்டு வெள்ளத்தின் பாதிப்பு குறையும். படத்தைப் பாத்தா மணலையெல்லாம் துப்புரவா சுரண்டி எடுத்தாச்சு. கள்ளியும் காட்டுச் செடிகளும் வளர்ந்து மழைத்தண்ணியெல்லாம் ஊருக்குள்ளே. இந்த மாநிலத்துக்கு நீர் மேலாண்மையில் முதலிடமாம். என்னத்தச் சொல்றது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X