அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிச.,13ல் தமிழகம் வருகிறார் பிரதமர்?

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி டிச., 13ல் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்; அரசு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் சட்டசபை தேர்தலில் பா.ஜ. உடனான கூட்டணி தொடரும் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர்.அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசித்தார். முக்கிய
PM Modi, TN visit, Rajini, Rajinikanth, Tamil Nadu, பிரதமர், மோடி, தமிழகம், ரஜினி

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி டிச., 13ல் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்; அரசு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் சட்டசபை தேர்தலில் பா.ஜ. உடனான கூட்டணி தொடரும் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர்.அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசித்தார். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். அவர் வந்து சென்ற பின் ரஜினி கட்சி துவக்கப் போவதாக அறிவித்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு விழாவில் பங்கேற்பதற்காக டிச., 13ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் பகலில் விமானத்தில் சென்னை வருகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு விழாவில் பங்கேற்கிறார்.அப்போது பிரதமரை முதல்வரும். துணை முதல்வரும் சந்தித்துப் பேசுகின்றனர். நடிகர் ரஜினியும் சந்தித்து பேசலாம் என தெரிகிறது.

அதன்பின் பிரதமர் டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகள் கூறுகையில் 'பிரதமர் அலுவலகத்தில் இருந்து பயண விபரம் இன்னமும் வரவில்லை' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - Mayiladuthurai ,இந்தியா
05-டிச-202015:38:10 IST Report Abuse
Suman Tamil Nadu Welcomes you...Kindly meet Super Star. Thanks
Rate this:
Cancel
05-டிச-202015:17:52 IST Report Abuse
தமிழ் தேர்தல் வரப்போகுதுல்ல இனிமே அடிக்கடி வருவாரு
Rate this:
Cancel
05-டிச-202014:12:04 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு வருக பைசா பிரயோஜனம் இல்லாமே அறிக்கை விட்டு மக்களைத் துன்புறுத்துற பேய்களை அடக்க வரும் மோடிக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X