அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் வருகைக்கு பின் தமிழக அரசியல் எப்படி இருக்கும்

Added : டிச 05, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
'எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என, 2021 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளை கட்சி துவங்கும் நடிகர் ரஜினியின் வருகைக்கு பின் தமிழக அரசியல் களம், கூட்டணி, மக்கள் மனநிலை, ஓட்டு வங்கி, கட்சிகள் நிலை எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராய்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.தமிழக அரசியல் தலைகீழாக மாறும்ரஜினி
 ரஜினியின் வருகை,பின் தமிழக அரசியல் எப்படி இருக்கும்


'எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என, 2021 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளை கட்சி துவங்கும் நடிகர் ரஜினியின் வருகைக்கு பின் தமிழக அரசியல் களம், கூட்டணி, மக்கள் மனநிலை, ஓட்டு வங்கி, கட்சிகள் நிலை எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராய்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


தமிழக அரசியல் தலைகீழாக மாறும்ரஜினி வருகையால் தமிழக அரசியல் தலைகீழாக மாறும். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் இரு துருவ கழகங்களுக்கு இணையாக மூன்றாம்கழகம் இல்லை. விஜயகாந்த் மூன்றாம் கழகமாக வந்தும் உடல்நிலை தடுத்தது. ரஜினி வருவதால் மூன்று துருவ ஆரசியலாக மாறி விட்டது. தி.மு.க., அ.தி.மு.க.,வை பிடிக்காதவர்கள் ரஜினிகட்சிக்கு ஓட்டளிப்பர். ரஜினி வராமல் இருந்தால் அ.தி.மு.க., அதிருப்தி ஓட்டுக்கள் தி.மு.க.,வுக்கு போகும். பிற கட்சிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு தான்
ஆதரவு தருவர். இரு கழகத்திலும் தற்போதுள்ள கூட்டணி கட்சிகள் ரஜினியுடன் சேரலாம். அமித்ஷா தமிழகம் வந்த போது 'பா.ஜ., அ.தி.மு.க.,கூட்டணி தொடரும்' என முதல்வர், துணை முதல்வர் கூறினர். அதைஅமித்ஷா உறுதி செய்யாமல் மவுனமாக இருந்தது ஒரு
ராஜதந்திரம். தேர்தலுக்கு முன், பின் ரஜினியுடன் பிற கட்சிகள் கூட்டணி சேரவாய்ப்புள்ளது.-கோலாகல ஸ்ரீநிவாஸ்தனித்து நின்றால் 8 சதவீதம் தான்ரஜினியின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். 50 ஆண்டுகளாக அரசியலில் தேசிய சிந்தனை இல்லை. ஆன்மிக, தேசிய சிந்தைனையுடன் நேர்மையானஅரசியலை ரஜினி உருவாக்குவார். 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் போது தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுக்களை பெறுவார். இவரது நகர்வு தி.மு.க., விற்கு ஆதரவாக இருந்தால் தேசியம், ஆன்மிகத்திற்கு எதிரான கட்சிக்கு உதவுவதாக அமையும். இவர் தனித்து நின்றால் 5 - 8 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். சரியான கூட்டணி அமைத்தால் தான் விரும்பும் மாற்றத்தை அவர் ஏற்படுத்த முடியும்.-ஸ்ரீராம் சேஷாத்ரி


ரஜினி தான் முதல்வர் வேட்பாளர்ரஜினி கூறுவது சரியாக நிறைவேறினால் காமராஜருக்கு பின் நல்லாட்சி கொடுக்க முடியும். ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்பது பொய்தகவல். அது போல் அவர் கூறவே இல்லை, அதில் மாற்று கருத்தே இல்லை. 'நீங்கள் தான் பிராண்ட், உங்களுக்கு பிடித்தவர்களை துணை முதல்வராக வைத்து கொள்ளுங்கள்' என்றேன். இதை ரஜினி ஏற்று கொள்ள வேண்டும். ஓட்டளிக்க விரும்பும் மக்களின் மனநிலை தான் இது. ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுத்தால் சிறப்பாக இருக்கும். யாருடன் கூட்டணி சேர்கிறார் என அடுத்த மாதம் தான் தெரியும். இந்த தேர்தலில் பல விசித்திரங்கள் நடக்கும். நடுநிலை வாக்காளர் ஓட்டு வங்கி ரஜினிக்கு சாதமாக இருக்கும்.-எஸ்.வி.சேகர், நடிகர்
நமது நிருபர்Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
09-டிச-202011:14:07 IST Report Abuse
Subramanian Narayanaswamy அந்தணர் முன்னேற்ற கழகம் உள்ளது
Rate this:
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
08-டிச-202016:44:57 IST Report Abuse
Siva Subramaniam தமிழ் நாட்டில் இனி அந்தணர்கள் மட்டும்தான் கட்சி ஆரம்பிக்கவேண்டும். அப்படி நடந்தால் இன்னமும் வித்தியாசமாக இருக்கும்.
Rate this:
Cancel
Chinnasamy Shanmugam - Coimbatore,இந்தியா
08-டிச-202015:16:48 IST Report Abuse
Chinnasamy Shanmugam முதலில் கட்சி ஆரம்பிக்கட்டுமே. கருத்து சொல்றவங்க யாருன்னு பாருங்க. இவர்கள் எல்லாம் ஒரு கட்சி ஆதரவாளர்கள். இதை பெரியதாக எடுத்துகொள்ள வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X