புதுடில்லி :'டில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டில்லியில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லியின் புராரி என்ற இடத்தில் உள்ள நிராகரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தை தொடரும்படி மத்திய அரசு வலியுறுத்தியது.
![]()
|
ஆனாலும் டில்லி - பஞ்சாப் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்தபடி உள்ளனர். இதன் காரணமாக டில்லி எல்லை பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சட்ட கல்லுாரி மாணவர் ரிஷப் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:எல்லையில் விவசாயிகள் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்காக டில்லிக்கு வரமுடியமால் பலர் தவிக்கும் நிலைஉருவாகி உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போதே பொது இடங்களில் காலவரையின்றி பேராட்டங்கள் நடத்த கூடாது என்றும் அதற்கென
ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்தெரிவித்தது.லட்சக்கணக்கான விவசாயிகள் ஒரே இடத்தில் திரள்வதால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.எனவே விவசாயிகளை டில்லி எல்லையில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE