முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ், தன் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பதவி களுக்கு, பெண்களைநியமித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜன., 20ல், ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்க உள்ளனர்.இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட முக்கிய பதவி களுக்கு,
 முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி

வாஷிங்டன் :அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ், தன் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பதவி களுக்கு, பெண்களைநியமித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜன., 20ல், ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட முக்கிய பதவி களுக்கு, பெண்களை தேர்வு செய்துள்ளார், கமலா ஹாரிஸ்.இது பற்றி அவர் கூறியதாவது:என் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக, டினா பிளோர்னேவையும், என் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, நான்சி மெக்டோல்வினியையும், உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, ரோகினி கோசோக்லுவை நியமித்துஉள்ளேன்.என் குழுவில் உள்ள மற்றவர்களுடன், இவர்கள் மூவரும் இணைந்து, கொரோனா கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news





விவேக் மூர்த்திக்கு மீண்டும் பதவி



அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, குழு ஒன்றை நியமித்துள்ளார்.இந்த குழுவின் துணைத் தலைவர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளவர், டாக்டர் விவேக் மூர்த்தி, 43.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, மருத்துவ சேவைப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.அதிபராக டிரம்ப் பதவியேற்றபின், விவேக் மூர்த்தி பதவி விலகினார். இந்நிலையில், டாக்டர் விவேக் மூர்த்தியை, அமெரிக்க மருத்துவ சேவைப் பிரிவின் தலைவராக, ஜோ பைடன் மீண்டும் நியமித்துள்ளார். சுகாதாரம் தொடர்பான விஷயங்களில், அரசுக்கு இவர் தான் ஆலோசனை வழங்குவார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-202014:56:40 IST Report Abuse
தமிழவேல் தவறே இல்லை, அவர்களும் நாட்டுக்குத் தேவையான மனித சக்திகள் தானே.... பெண்களுக்கும் வம்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
05-டிச-202014:34:21 IST Report Abuse
Raj வாழ்க தமிழச்சி
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
05-டிச-202012:23:17 IST Report Abuse
Ramanathan Muthiah அப்படியே எங்கள் சுடலைக்கு Nevada. வில் ஒரு துணை ஆளுநர் பதவியும் அவர் மக்கு மகனுக்கு Gerogia.வில் ஒரு துணை ஆளுநர் பதவி மற்றும், அவருக்கு ஒரு நயன்தாரா போல ஒரு ....இம் கொடுத்தா நீங்கள் நல்லா வருவீங்க .....இல்லை என்றால் எங்கள் 200. ரூபாய் ஓபீஸ்கள் அங்கெ வந்து போராட்டம், ஆர்பாட்டம் செய்து, பிரியாணி கடை, beauty.பரலூர் கடை மற்றும் பஜ்ஜி கடை ..மன்னிக்கவும் pizzaa. கடை, பிராந்தி கடை முன்னின்று போராட்டம், ஆர்பாட்டம் செய்வார்கள். ok. வா ஹா ஹா ஹா ஹா ....எங்கள் தத்தி சுடலை மாற்று சின்ன மக்கு சுடலை அப்படியாக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X