இது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரமே சிறந்தது!

Updated : டிச 06, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (39) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:நா.ராஜகோபாலன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இப்பகுதியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டாம் என, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். நான், ஓட்டு சீட்டு மற்றும் இயந்திரம் என, இரு காலத்திலும் பணி புரிந்துள்ளேன். என் அனுபவ
ithu ungal idam, voting machine, best, இது உங்கள் இடம், ஓட்டுப் பதிவு இயந்திரம், சிறந்தது


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


நா.ராஜகோபாலன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இப்பகுதியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டாம் என, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். நான், ஓட்டு சீட்டு மற்றும் இயந்திரம் என, இரு காலத்திலும் பணி புரிந்துள்ளேன். என் அனுபவ அடிப்படையில், 'மாபெரும் ஜனநாயக நாட்டில், ஓட்டுப்பதிவு இயந்திரம் தான், சிறந்தது' என்பேன்.

'எலக்ட்ரானிக்' இயந்திரத்தின் செயல்பாட்டை, 'ஹாக்கிங்' எனப்படும், தகவல் திருட்டு செய்ய முடியும் என, பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹாக்கிங் செய்ய, இணைய வசதி வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அந்த வசதி கிடையாது. அது ஒரு, 'கால்குலேட்டர்' போன்றது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் தேர்தல் நடத்துவது என்பது, சாதாரண விஷயம் அல்ல.

எவ்வளவோ கோடி ரூபாய் வாரி இறைக்க வேண்டும்; எண்ணிலடங்கா மனித உழைப்பு, அதில் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம், ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஓட்டுப்பதிவு இயந்திரம் எப்படி பாதுகாக்கப்படுகிறது? ஓட்டு சாவடிக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது? தேர்தல் நேரத்தில், அது எப்படி செயல்படுத்தப்படுகிறது? ஓட்டு எப்படிகணக்கிடப்படுகிறது என்ற, பல சந்தேகங்களுக்கு, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது; ஆனால், ஓட்டு சீட்டில் செய்ய முடியும்.

ஒரு கட்சிக்கு விழுந்த ஓட்டை, வேறு கட்சியின் பெட்டியில் போட முடியும். அரசுக்கு எதிரான மனநிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர் இருந்தால், முறைகேடு அதிகளவில் நடக்கும். அரசியல் கட்சியின் முகவர்கள், முதல், ஒரு மணி நேரம் மட்டுமே, ஓட்டு சீட்டு எண்ணிக்கையை கவனிப்பர்; பின், களைத்து விடுவர்.


latest tamil news


இயந்திரத்தில், செல்லாத ஓட்டு பிரச்னை ஏதும் இல்லை; ஓட்டுச் சீட்டில் உண்டு. வெற்றி வித்தியாசம், செல்லாத ஓட்டை விட குறைவாக இருக்கும் நேரத்தில், அரசியல்வாதிகளிடம் இருந்து அழுத்தம் அதிகமாக வரும். ஓட்டுச் சீட்டில் தேர்தல் நடத்தினால், 'பேப்பரில் மோசடி; இங்க் மோசடி' என, குற்றச்சாட்டு வரும். தோல்வியை, எந்தக் கட்சியும் ஒத்துக் கொள்ளாது. ஓட்டு சீட்டு முறை, பிரச்னையை அதிகரிக்கும். ஓட்டுப்பதிவு இயந்திரமே, எவ்வகையிலும் சிறந்தது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
05-டிச-202022:38:15 IST Report Abuse
g.s,rajan மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் மற்றும் முறைகேடுகள் நிச்சயம் மிக எளிதாக செய்ய முடியும் என்றே தோன்றுகிறது ..தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் நபர் அதற்கு உரிய பொத்தானை அழுத்தும்போது அந்த அந்த ஒட்டு அந்த கட்சிக்குத்தான் செல்கிறதா ???இல்லை வேறு கட்சிக்கு செல்கிறதா என்பதை செய்முறைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் .மக்களின் சந்தேகத்தை போக்க வேண்டும் . மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நிச்சயம் முறைகேடுகளை செய்ய முடியும் ,மின்னனது மற்றும் கணிப்பொறி போன்றவற்றில் எளிதாக கோல்மால் செய்ய நூறு சதவீதம் வாய்ப்பு உள்ளது .இதில் எழும் சந்தேகளுக்கு தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மை குறித்து தெரு முனைப்பு பிரச்சாரம் மற்றும் இதன் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தெளிவாக விளக்கி அதன் நமபகதத்தன்மையை நிரூபிக்க வேண்டும் . இது குறித்து எவரும் மீண்டும் தேர்தல் ஆணையத்தை கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை தாமாகவே முன் வந்து தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் .மேலும் மின்னனனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளோட்டு எண்ணிக்கையை கிராஸ் செக் CROSSCHECK செய்ய என்ன என்ன வழி வகைகளை கையாள போகிறது இதற்கு மத்திய அரசுமற்றும் தேர்தல் ஆணையம்என்ன செய்யப்போகிறது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
ktkswami - delhi,இந்தியா
05-டிச-202022:04:00 IST Report Abuse
ktkswami No. Only through ballot paper
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-டிச-202021:39:00 IST Report Abuse
sankaseshan ஏம்பா வேதத்துவேட்டு டிஜிட்டல் உன்னாலேநிரூபிக்க முடியுமா ? முடியலெ நா வாயமூடிக்கிட்டு இருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X