உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்| Dinamalar

உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (5) | |
புதுடில்லி: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு, ஆறு மாதங்கள் அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட, மொத்தம், 27 மாவட்டங்களுக்கு, கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுஉள்ளது. மாநகராட்சி மற்றும்

புதுடில்லி: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு, ஆறு மாதங்கள் அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



latest tamil news


தமிழகத்தில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட, மொத்தம், 27 மாவட்டங்களுக்கு, கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுஉள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை நடத்தாமல், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் கமிஷன் காலம் தாழ்த்தி வருவதாக, எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக, சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்த வேண்டும். இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்த, மூன்று மாதங்களில் வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு பணிகளை முடித்து, அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க, மேலும் ஆறு மாத கால அவகாசத்தை நீட்டிக்கும்படி, கோரப்பட்டது.இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட, அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரை பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

எனவே, அப்பணிகளை முடிக்க, ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு, மாநில தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு மேலும், ஆறு மாதங்கள் அவகாசத்தை நீட்டித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X