வாஷிங்டன்: கொரோனா பாதிப்பால் மீண்டும் அல்லல்படும் அமெரிக்காவில் தொடர்ந்து 2வது நாளாக 2 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பல நாடுகள் தொற்றிலிருந்து மீண்டு வரும் சூழலில் 2வது அலை பாதிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகிலேயே அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை, 1.47 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளதாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. கடந்த டிச.,3ம் தேதி 2.2 லட்சம் பேர் பாதிப்படைந்து, 2,921 பேர் பலியாகினர். நேற்று (டிச.,4) 2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 2,506 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE