புட்காம்: வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்களை காஷ்மீர் வனத்துறையினர் வெட்டிச்சாய்த்தனர்.
மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் கனிடாஜன் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் ஆப்பிள் மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று வனத்துறையினர் அங்கு வந்து, நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்களை வெட்டி சாய்த்தனர்.
இது தொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறுகையில், ‛வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டி சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இடத்தை காலி செய்யாததால் மரங்களை வெட்டிச் சென்றனர்,' என்றார்.

இது குறித்து மரங்களை வளர்த்து பறிகொடுத்தவர் கூறுகையில், ‛நாங்கள் இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் கூட இங்கு வாழ்ந்தபோதிருந்தே இந்த ஆப்பிள் மரங்களை நட்டுள்ளனர். இப்போது ஆப்பிள் மரங்கள் விழுந்து கிடப்பதை பார்க்கையில் மனம் நொந்து கொண்டிருக்கிறது,' என்றார்.
வனத்துறையினரிடம் விசாரித்ததில், ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் ஆகிவிட்டதாக கூறினர். மேலும், ‛எல்லா இடங்களிலும் வன நிலங்களை மீட்டெடுப்போம்,' என்றும் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE