அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன்: கமல் எதிர்ப்பு

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை: ஆட்சியாளர்களுக்கு வளைந்து கொடுக்காததால், அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மையம் கமல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கமல் கூறியுள்ளதாவது: சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போது, தமிழகத்தில் இதற்கு தகுதியானவர் இல்லையா என்ற கேள்வியை நாம் தான் எழுப்பினோம். அந்த
kamalhaasan, Ikamalhaasan, சூரப்பா, அண்ணாபல்கலை, கமல், கமல்ஹாசன்,

சென்னை: ஆட்சியாளர்களுக்கு வளைந்து கொடுக்காததால், அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மையம் கமல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கமல் கூறியுள்ளதாவது: சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போது, தமிழகத்தில் இதற்கு தகுதியானவர் இல்லையா என்ற கேள்வியை நாம் தான் எழுப்பினோம். அந்த கேள்வி தற்போதும் தொக்கி நிற்கிறது. அதில் மாற்றமில்லை. ஆனால் வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்திற்கு முன் நெளிந்து குலையாதவர். தமிழக பொறியியல் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள். வளைந்து கொடுக்கவில்லையென்றால், ஒடிப்பது தானே அவர்களின் விளக்கம். எவனோ அடையாளத்தை மறைத்து கொண்டு, ஒரு பேடி எழுதிய மொட்டை கடுதாசியின் அடிப்படையில் விசாரணை குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டை தலையில் முடி வளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடை போட்டு காத்திருக்கிறார்கள்.


latest tamil newsமுறைகேடாக அண்ணா பல்கலையில் தங்கியிருந்தவர்களையும், பல்கலை வாகனங்களை பயன்படுத்தியவர்களை விசாரித்து விட்டீர்களா?
உயர்கல்வித்துறை அமைச்சர் ரூ.60 லட்சம் வாங்கி கொண்டு தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுமாரசாமி குற்றம்சாட்டினாரே விசாரித்துவிட்டீர்களா?
உள்ளாட்சிதுறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நலவாழ்வுத்துறை, பால்வளத்துறை என அனைத்து துறையின் அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என அன்றாடம் சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் , ஊடகங்களும் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்து விட்டீர்களா?
தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. கரைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?
இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், இப்போது மதிப்பெண் கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா?

சூரப்பாவின் கொள்கை சார்புகள், அரசியல் நிலைபாடுகள் மீது நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் , ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மையம் சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளர்களுக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்னை இல்லை. நேர்மையாக வாழ நினைப்பவனுக்கும் ஊழல் பேர்வழிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால், உன் வாழ்வை அழிப்போம் அவதூறு பரப்பி உன் அடையாளத்தை சிதைப்போம் எனக்கூறி சூர்ப்பாவிற்கும், அவருடன் பணியாற்றுபவருக்குமான எச்சரிக்கை.

சகாயம் முதல் சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்கள் பட்டியல் பெரிது.பேரதிகாரிகளே இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால் சாமனியனின் கதி என்ன? இதை இனியும் தொடர விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாகக்கூடாது. நேர்மைக்கும், ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்க விரும்புபவர்கள், தங்கள் மவுனம் கலைத்து பேசியாக வேண்டும். குரலற்றவர்களின் குரலாக, நாம் தான் மாறியாக வேண்டும். நேர்மை தான் நமது ஒரே சொத்து. அதையும் விற்று வாயில் போட்டு விடத்துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஓட விரட்ட வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
07-டிச-202013:30:51 IST Report Abuse
sankaseshan தப்பி தவறி ஒரு நல்லதை சொல்லிட்டாரு உலக்கை நாயகன் நாளையே இதை மாத்தி சொன்னாலும் சொல்லுவாரு நம்பமுடியாது
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-டிச-202007:58:50 IST Report Abuse
sridhar நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நல்ல கருத்து .
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
06-டிச-202007:44:49 IST Report Abuse
mindum vasantham ivaru oru size aaka arasiyal seikirar stalin vs rajini(kai kattum tamil ilaya muthalvar ) endra iru thuruva arasiyal thaan ini
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X