போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ஐநாவில் இந்தியா ஆதரவு!

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
வியன்னா: மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்துகஞ்சாவை ஐநா நீக்கியுள்ளது. இதற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.ஐ.நா.,வின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல்
Reclassifies, Cannabis, AddictiveOpioids, கஞ்சா, போதைப்பொருள், பட்டியல், நீக்கம்

வியன்னா: மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்துகஞ்சாவை ஐநா நீக்கியுள்ளது. இதற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.

ஐ.நா.,வின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. கஞ்சாவை வேறு பட்டியலுக்கு மாற்றுவதற்கு உலக சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளையும் போதை மருந்துகளுக்கான ஆணையம் பரிசீலித்துள்ளது. கஞ்சாவை பட்டியல் மாற்றம் செய்வது குறித்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


latest tamil news



எனினும், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஆதரவாக 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன. ஏற்கெனவே பெரும்பான்மையை எட்டிவிட்ட நிலையில், ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஞ்சாவுக்கு ஆதரவாக இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. உக்ரைன் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rauf thaseem - mawanella,இலங்கை
06-டிச-202007:24:55 IST Report Abuse
rauf  thaseem சிறை சாவு குறையும்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
06-டிச-202006:35:29 IST Report Abuse
siriyaar போதை விஷயத்தில் மோடி அதர்மம் செய்கிறார்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-டிச-202005:57:54 IST Report Abuse
D.Ambujavalli இனி நெல்லும், கரும்பும், காய்கறிகளும் பயிரிட்டு கஷ்டப்படாமல், கஞ்சாவில் காசு அள்ளலாம் அரசும் ஊக்குவிக்கும், கஜானாவை நிரப்ப
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X