பீஜிங்: சீனா, சமீபத்தில் நிலவினை ஆய்வு செய்ய அனுப்பிய சாங்கே 5 எனும் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் அந்நாட்டின் கொடியை ஏற்றியது. இதன்மூலம் நிலவில் கொடி ஏற்றிய 2வது நாடானது. முதலில் அமெரிக்கா கொடியேற்றியது.
1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார். 1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக் கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா. அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக, கடந்த 2012-ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது.

இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையில் சீனாவும் இணைந்துள்ளது. சாங்கே 5 என்ற லேண்டரை நிலவில் நிலைநிறுத்திய சீனா, அதன்மூலம் அந்நாட்டின் கொடியை நிலவின் மேற்பரப்பில் ஏற்றியது மட்டுமல்லாமல் அதனை புகைப்படமும் எடுத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை சீனா விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் கொடியேற்றிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அமெரிக்கா கொடிகள் அனைத்தும் மனிதர்கள் ஏற்றியது, சீனாவின் கொடி, லேண்டர் ஏற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE