ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் 5 முக்கிய காரணிகள்

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத் மாநகாரட்சி, 150 வார்டுகளை உடையது. இம்மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பா.ஜ., காங்கிரஸ், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.முடிவில், 55 வார்டுகளை கைப்பற்றி, தனிப் பெரும் கட்சியாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றது. பா.ஜ., 48 வார்டுகளை கைப்பற்றி, இரண்டாவது இடத்தையும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., 44 வார்டுகளை
hyderabadelection, hyderabad, bjp, trs, aimis, owaisi,

ஐதராபாத்: ஐதராபாத் மாநகாரட்சி, 150 வார்டுகளை உடையது. இம்மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பா.ஜ., காங்கிரஸ், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.முடிவில், 55 வார்டுகளை கைப்பற்றி, தனிப் பெரும் கட்சியாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றது. பா.ஜ., 48 வார்டுகளை கைப்பற்றி, இரண்டாவது இடத்தையும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., 44 வார்டுகளை கைப்பற்றி, மூன்றாவது இடத்தையும் பிடித்தன. காங்கிரஸ், இரண்டு வார்டுகளில் மட்டும் வென்று, படுதோல்வியடைந்தது.
தேர்தல் முடிவை தொடர்ந்து, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவு, எதிர்பார்த்தது போல் இல்லை என டிஆர்எஸ் கட்சி தலைவர் கேடி ராமாராவ் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள், மாநிலத்தில் மாற்று அரசியலுக்கான கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திய 5 காரணங்கள்


பா.ஜ., வெற்றிக்கு காரணம் என்ன?


இந்த தேர்தலில் முக்கியமான விஷயம் பா.ஜ.,வின் எழுச்சிதான். கடந்த 2016 தேர்தலில் 4 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த அக்கட்சி, தற்போது 48 வார்டுகளில் வெற்றி பெற்று, மாநகராட்சியில் 2வது பெரிய கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில், எல்பி நகர் மற்றும் செகந்திராபாத்தில் இருந்து, அதிக இடங்கள் கிடைத்துள்ளன. செகந்திராபாத், கைராதாபாத்தில் பா.ஜ.,வலுவாக உள்ள பகுதியாகும். இவை தவிர்த்து, பேகம் பஜார் உள்ளிட்ட பழமையான பகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.


latest tamil news
இந்த பகுதிகளில் ஆர்எஸ்எஸ் வலுவாக உள்ளது. கடந்த ஆண்டு டிச., மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத்,இங்கு வந்த போது, அதன் உறுப்பினர்கள் பெரிய அணிவகுப்பு நடத்தினர். மேலும், இந்த பகுதி வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டது. இது, அப்பகுதி மக்களிடையே ஆளும் டிஆர்எஸ் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை வலுவிழந்து காணப்படுகின்றன. இதனால், டிஆர்எஸ் கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைத்தது. நடிகர் பவன் கல்யாணின் ஜன் சேனா கட்சியும் அளித்த ஆதரவு காரணமாக கடலோர ஆந்திராவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஓட்டும் பா.ஜ.,வுக்கு கிடைத்தது. முக்கியமாக, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஹிந்துக்களின் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைத்தது.


டிஆர்எஸ்., மீது அதிருப்தி


தெலுங்கானா மாநிலம் அமைந்த பிறகு, அங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. மாநிலம் அமைந்து 6 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது அக்கட்சி பலம் குறைந்துள்ளது. 2016 ல்99 வார்டுகளை கைப்பற்றிய அக்கட்சி தற்போது 60 ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் அக்கட்சி பலவீனமடையவில்லை. ஐ தராபாத் எப்போதும், டிஆர்எஸ் வலுவாக இருந்தது இல்லை. ராயல்சீமா மற்றும் கடலோர ஆந்திராவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள், ஹிந்தி மற்றும் உருது மொழி பேசும் மக்கள், எப்போதும் டிஆர்எஸ் கட்சியை ஆதரித்தது கிடையாது.


latest tamil newsஅதேநேரத்தில் 2014 ல் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த தரப்பு மக்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்தது. தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை பலவீனமடைய துவங்கியது, டிஆர்எஸ்க்கு ஒரு வகையில் சாதகமாக தான் இருந்தது.

இருப்பினும், இந்ததேர்தலில், தெலுங்கானா மாநிலத்தை சாராதவர்களின் ஓட்டு பெரும்பாலும் பா.ஜ.,வுக்கு தான் சென்றது. ஆனால், ஓய்எஸ்ஆர் கட்சியை விட தெலுங்கு தேசம் கட்சி ஓட்டுகளை தான் பா.ஜ., அறுவடை செய்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒட்டுகள் டிஆர்எஸ் கட்சிக்கு சென்றுள்ளது. அக்கட்சியின் சரிவுக்கு அக்கட்சி தான் காரணம். தெலுங்குதேசம் மற்றும் காங்கிரசின் பலவீனப்படுத்தியது மட்டுமல்லாமல், அதனால் ஏற்பட்ட இடைவெளியை பா.ஜ., நிரப்ப வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது.பா.ஜ.,வுக்கு பல விஷயங்களில் ஆதரித்த டிஆர்எஸ் கட்சிக்கு, பிரதிபலனாக எந்த உதவியும் கிடைக்கவில்லை.


பலத்தை தொடரும் ஓவைஸி


மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.,2வது இடத்தை பிடித்தாலும், நம்பல்லி, விஜய்நகர் உள்ளிட்ட கைராதாபாத்தில் வலுவாக இருக்கும் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் செல்வாக்கை குறைக்க முடியவில்லை.
கடந்த தேர்தலை விட குறைவாக இந்த முறை போட்டியிட்டாலும் ஓவைஸி கட்சி 44 இடங்களை பிடித்துள்ளது. பா.ஜ.,வின் கடுமையான விமர்சனத்தை மீறியும் அக்கட்சிக்கு இவ்வளவு இடங்கள் கிடைத்தது. பா.ஜ.,வின் எதிர்ப்பு காரணமாவும் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஓட்டுகள் கிடைத்திருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsடிஆர்எஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், ஏஐஎம்ஐஎம் கட்சி ‛கிங்மேக்கராக' மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல வார்டுகளில் ஏஐஎம்ஐஎம்வெற்றி பெற்றாலும், வெற்றி வித்தியாசம், பா.ஜ.,வினால் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை குறைந்துள்ளது.
ராஜேந்திர நகரில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதிக்கம் செலுத்த முயன்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவானது, வருங்காலத்தில் பா.ஜ., தான் அங்கு ஆதிக்கம் செலுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.


காணாமல் போன காங்., தெலுங்குதேசம்


மாநகராட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இக்கட்சிகளுக்கு ஓட்டு போடுவது வீண் வேலை என மக்கள் கருதியிருக்கலாம் என்ற கருத்து அங்கு எழுந்துள்ளது. இதில் பா.ஜ., மட்டுமே விதிவிலக்காக இருந்தது.

கடந்த லோக்சபா தேர்தலில் மால்கஜ்கிரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தொகுதியின் கீழ் வரும் எல்பி நகரில் 2 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலை தெலுங்கு தேசம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அக்கட்சிக்கு ஓட்டுப்போட நினைத்தவர்கள், இந்த முறை பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தனர். இதன் காரணமாக , பா.ஜ.,வுக்கு அதிக இடங்கள் கிடைத்தது. தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு சென்றது ,வரும் காலங்களில் அக்கட்சிக்கு மேலும் சிக்கலை தான் ஏற்படுத்தும்.latest tamil news

மாநில அரசியலில் ஏற்படும் மாற்றம்


அதிக இடங்களில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றாலும் அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சிக்கு ஏஐஎம்ஐஎம் அல்லது பாஜ.,வின் ஆதரவு தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் டிஆர்எஸ் கட்சியை ஏஐஎம்ஐஎம் ஆதரித்த வரலாறு உண்டு. அதனால், இந்த முறையும் மீண்டும் ஆதரவு தரலாம். இது பா.ஜ.,வுக்கான எதிர்ப்பு ஒரு முனையாக மாறுவதுடன், ஹிந்துத்வா கொள்கையை வலிமையாக எடுத்து செல்லவும் வாய்ப்பு உண்டு.
மாநில சட்டசபையில் மொத்தம் 119 இடங்கள் உள்ளன. இதில் 24 இடங்கள் ஐதராபாத் மாநகராட்சியின் கீழ் வருகிறது. இதன் மூலம் , இங்கிருந்து பா.ஜ.,வுக்கு 7 முதல் 8 இடங்கள் கிடைத்து சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும் சூழல் ஏற்படும். இந்த தேர்தல் முடிவுகள், 24 தொகுதிகளில் மட்டும் எதிரொலிக்காது. தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்தாலும், அவர்களின் புகலிடமாக ஐதராபாத் உள்ளது. இதனால், இந்த தேர்தல் முடிவின் தாக்கம் மற்ற மாவட்டங்களிலும் ஏற்படுத்தும்.

கடந்த லோக்சபா தேர்தலில் அடிலாபாத், கரீம் நகர் மற்றும் நிஜாமாபாத் தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் எல்பி நகரில் கிடைத்த வெற்றியானது, பா.ஜ.,வை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நலகோண்டா மாவட்டத்தில், உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் புகலிடமாக எல்பி நகர் உள்ளது. காங்கிரஸ் வலுவாக உள்ள மாவட்டம். தோல்வியில் இருந்து பாடம் கற்று புத்துயிர் பெற முடியாவிட்டால், அக்கட்சி மீளுவது கடினமாகவிடும். மே.வங்கம், ஒடிசா மாநிலங்களில் பிராந்திய கட்சிகளிடம் தோல்வியடைந்து மீள முடியாத நிலையில் உள்ளதோ அது போன்ற சூழ்நிலை, தெலுங்கானாவில் ஏற்படும்.


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
07-டிச-202015:43:22 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை மக்கள் அவர்களுக்கான சவக்குழியை அவர்களே தோண்டி கொள்கிறார்கள்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-டிச-202012:20:23 IST Report Abuse
sridhar Communists together scored far less than Nota. Anti Hindu நாத்திகம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை . தென் இந்தியா மாறுகிறது. தமிழகமும் கேரளமும் மற்ற இடங்களில் ஒதுக்கிய குப்பையை உயர்ந்ததாக எண்ணி வீணாகி கொண்டிருக்கிறது .
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
06-டிச-202010:52:02 IST Report Abuse
Balaji காரணிகள் அஞ்சோ பத்தோ.. ஒன்று மட்டும் நிதர்சனம். இஸ்லாமியர் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இஸ்லாத்தை முன்வைக்கும் இஸ்லாமியருக்கே / இஸ்லாமிய கட்சிக்கே ஓட்டு போடுவர் என்பது தெளிவாக தெரிகிறது. இது மதவாதம் இல்லாம வேறு என்ன?
Rate this:
sridhar - Chennai,இந்தியா
06-டிச-202012:23:17 IST Report Abuse
sridharஅதில் கூட தமிழகத்தில் சில நன்மை வரும். அவர்கள் இங்கு வந்தால் திமுக வோட்டு பிரியும் . ஹிந்து ஒற்றுமை கூடும் . திமுக கூட்டணி கூண்டோடு ஒழியும்....
Rate this:
Suhail - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202016:03:43 IST Report Abuse
Suhailஆல் சங்கி ஸ்ஸ் .வேற வேலை இல்ல யா?????.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X