டில்லியில் கடுங்குளிர் நிலவும் சூழ்நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும்: தோமர் வலியுறுத்தல்
புதுடில்லி: டில்லியில் கடுங்குளிர் நிலவும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதிலும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை.இதையடுத்து வரும் டிச. 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியது, விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்கத்தினர் மிகவும் ஒழுக்கத்துடன் பங்கேற்றமைக்காக பாராட்டுகிறேன்.
மீண்டும் டிச.9-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என நம்புகிறேன். தற்போது டில்லியில் கடுங்குளிர் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் போராட்டத்தில் முதியவர்களும் பங்கேற்றுள்ளதால், அவர்கள் தங்கள் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE