லக்னோ: உ..பி., சட்ட மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ., சமாஜ்வாடி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பட்டதாரிகளுக்கான ஆக்ரா தொகுதியில் பா.ஜ., முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
![]()
|
இது குறித்து உ..பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறியதாவது: காலியாக உள்ள 11சட்டமேலவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ., சமஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பாக தேர்தலில் சுமார் 199 பேர் போட்டியிட்டுள்ளனர். காலியாக உள்ள 11 இடங்களில் 5 இடங்கள் பட்டதாரிகளுக்கும் ஆறு இடங்கள் ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கான காலியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பா.ஜ., மூன்று இடஙகளிலும் சமஜ்வாடி கட்சி இரண்டு இடங்களையும் பிடித்துள்ளது. பட்டதாரிகளுக்கான வாரணாசி, லக்னோ மற்றும் மீரட் ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சட்டமேலவைக்கான மொத்தம் உள்ள 100 இடங்களில் சமாஜ்வாடி கட்சிக்கு 52 பேரும், பா.ஜ.,வுக்கு 19 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 8 பேரும், காங்.,சார்பில் இரண்டு பேரும், அப்னாதளம், மற்றும் ஷிக்ஷா தளம் கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் உள்ளனர். மேலும் மூன்று சுயேட்சைகள் மற்றும் 14 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
பட்டதாரிகளுக்கான இடமான ஆக்ராவில் முதன் முறையாக பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.,வின் சார்பில் போட்டியிட்ட மன்வேந்திர பிரதாப்சிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசீம் யாதவை 5,477 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் ஆசிரியர்கள் வக்கீல்கள் பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்போம். மாணவர்களுக்கான கல்வி கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பு படிப்புகளை துவங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement