பார்லி.,கட்டட அடிக்கல் நாட்டு விழா: மோடிக்கு ஓம் பிர்லா அழைப்பு

Updated : டிச 07, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணிகள் துவங்கவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். ஒப்பந்த பணிதற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், எட்வின் லுட்த்யன் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகிய இரு பொறியியல் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு,
 பார்லி., கட்டடம், அடிக்கல், ஓம் பிர்லா, மோடி அழைப்பு

புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணிகள் துவங்கவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.


ஒப்பந்த பணி


தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், எட்வின் லுட்த்யன் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகிய இரு பொறியியல் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டது.மிகவும் பழமையான இந்த வட்ட வடிவிலான கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடத்தை கட்ட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்து, அதற்கான ஒப்பந்த பணிகள் துவங்கின. புதிய கட்டடம் கட்டும் ஒப்பந்தப் பணியை, 'டாடா பிராஜக்ட்ஸ் லிமிடெட்' நிறுவனம் எடுத்து, அதற்கான பூர்வாங்க பணிகளைத் துவங்கியது.

அதன்படி, சில மரங்களை, அப்படியே பெயர்த்து எடுத்து, வேறு இடத்தில் நடுவது உள்ளிட்ட, சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கட்டடம் கட்டும் பணிகளை முறையாக துவங்க திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில், சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில், சபாநாயகர் ஓம் பிர்லா, நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா குறித்து, பிரதமரிடம் விளக்கினார்.




எதிர்பார்ப்பு



அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று, அடிக்கல் நாட்ட வரும்படி, பிரதமருக்கு முறைப்படி, சபாநாயகர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, தேதியும், நேரமும், ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென எதிர்பார்க்க ப்படுகிறது. மொத்தம், 861 கோடியே, 90 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடம், ஏற்கனவே உள்ள தற்போதைய பார்லிமென்ட் கட்டடத்தின் அருகிலேயே அமையஉள்ளது.

முக்கோண வடிவில் அமையும் புதிய கட்டடத்தில், பிரமாண்டமான அரசியல் சாசன அரங்கம், எம்.பி.,க்களுக்கான ஓய்வறைகள், நூலகம், கமிட்டி அறைகள், உணவகங்கள், 'கார் பார்க்கிங்' என, பல்வேறு வசதிகளும் இடம் பெறவுள்ளன. நாட்டின், 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், வரும், 2022 ல் நடக்கவுள்ளன. அப்போது முதல், பார்லிமென்ட்டின் கூட்டத்தொடர் அனைத்தையும், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202008:34:33 IST Report Abuse
ஆப்பு எதுக்கெல்லாமோ அடிக்கல் நாட்டுபவர் இதை விட்டு விடுவாரா? எல்லாம் வருவார் போங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X