அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிவாரண பணிகள் மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்!

Updated : டிச 07, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில், புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகள் மேற்கொள்ள,11 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்களில் முகாமிட்டு, அதிரடி மீட்பு நடவடிக்கைகளில், அவர்கள் ஈடுபட உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கி பணியாற்றவும்,மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி
நிவாரண பணிகள் , அமைச்சர்கள், நியமனம்,முதல்வர் பழனிசாமி,

சென்னை :தமிழகத்தில், புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகள் மேற்கொள்ள,11 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்களில் முகாமிட்டு, அதிரடி மீட்பு நடவடிக்கைகளில், அவர்கள் ஈடுபட உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கி பணியாற்றவும்,மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விடவும்,
முதல்வர் பழனிசாமி, உத்தரவிட்டுள்ளார்.

'புரெவி' புயல் தாக்கத்தால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கடலுார் உள்ளிட்ட சில மாவட்டங்கள், கன மழையால் கடும் சேதமடைந்துள்ளன.
இம்மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் முடிந்த பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

* புரெவி புயல் காரணமாக, கடலுார், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை, விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன
.

* தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில், ஆற்றோரங்களில் வசிக்கும், 36 ஆயிரத்து, 986 பேர், 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்; அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
.

* பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தினமும், ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், குடும்பம் ஒன்றுக்கு, 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலை, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
அத்துடன், ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

* பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

* புயல் மற்றும் கன மழை காரணமாக, இதுவரை, ஏழு பேர் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், புயல் மற்றும் கன மழை காரணமாக, 37 பசு மாடுகள், நான்கு எருமை மாடுகள், நான்கு எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் இறந்துள்ளன. உயிரிழந்த மாட்டிற்கு, 30 ஆயிரம் ரூபாய்; எருதுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; கன்றுக்கு, 16 ஆயிரம் ரூபாய்; ஆடுக்கு, 3,000 ரூபாய், நிவாரணமாக வழங்கப் படும்.

* புயல் காரணமாக, 75 குடிசை வீடுகள், எட்டு ஓட்டு வீடுகள் முழுமையாகவும்; 1,725 குடிசை வீடுகள், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்
.

* பல மாவட்டங்களில், 27 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்க, 34 மருத்துவ முகாம்கள், 43 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

* பயிர் சேதத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க, பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது
.

* தமிழகத்தின் ஓரிரு இடங்களில், கன மழை மற்றும் மிக கன மழை, இன்றும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலுார் மாவட்டத்திற்கு, அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத்; திருவாரூர் மாவட்டம், அன்பழகன், காமராஜ்; நாகப்பட்டினம், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, செங்கோட்டையன், பெஞ்சமின்.சென்னை மாவட்டத்திற்கு, ஜெயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.* சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களில், தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணி துறை அலுவலர்கள், அனைத்து நீர் நிலைகளையும், தொடர்ந்து கண்காணித்து, கரைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாதுகாக்க வேண்டும்.

* பாதிப்படைந்த பகுதிகளில், போர்க்கால அடிப்படையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள், துரிதமாக பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
06-டிச-202012:30:39 IST Report Abuse
Srinivas மங்குணிகளுக்கு இனிப்பு போல் கிடைத்த வாய்ப்பு. ஒரு ரூபாய் செலவு செய்து லட்சம் என்று கணக்கு எழுதி சுருட்ட எல்லா மங்குணிகளும் தயார்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
06-டிச-202012:17:14 IST Report Abuse
Swaminathan Chandramouli அடாத மழை பெய்தது, ஊரெல்லாம் தண்ணீரில் மூழ்கி வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் சொத்துகள் நாசமாகி அவர்கள் நடுத்தெருவில் நின்றபோது கவலை படாமல் புயல் ஓய்ந்து மழை ஒருவாறு நிற்கும் நிலையில் அமைச்சர்கள் தங்கள் வீட்டில் இருந்து முதல்வரின் சிக்னல் கிடைத்தவுடன் நிவாரணப்பணிக்குகளத்தில் இறங்க ஆயத்தம் ஆகிறார்கள்
Rate this:
Cancel
06-டிச-202012:04:00 IST Report Abuse
ஆப்பு பணம் வெளில போயிருக்கக் கூடாதுங்கற அக்கறை. தேர்தல் செலவுக்கு நிறைய தேவைப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X