அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

Updated : டிச 07, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை : 'எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற அவதுாறுகள் பேசுவதை தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும். மத்திய குழுவினரிடம், புயல் பாதிப்பு முழு நிலவரத்தை எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண உதவியை பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 'நிவர்' மற்றும், 'புரெவி' புயல் தாக்கத்தால், கடலோர மாவட்டங்கள்
செயல்படுங்கள்,  அரசு, ஸ்டாலின், அறிவுரை

சென்னை : 'எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற அவதுாறுகள் பேசுவதை தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும். மத்திய குழுவினரிடம், புயல் பாதிப்பு முழு நிலவரத்தை எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண உதவியை பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: 'நிவர்' மற்றும், 'புரெவி' புயல் தாக்கத்தால், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின், கன மழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தொடர் மழை, மின் வெட்டு நீடித்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில், மழை பாதிப்பால், மக்கள் அவதிப்படுகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. சிதம்பரம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில், குடியிருப்புகள், குடிசை பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

சரியாக துார் வாரப்படாத நீர் வழித்தடங்கள், நீர் நிலைகள், சீரமைக்கப்படாத மழை நீர் வடிகால் கால்வாய்கள் ஆகியவற்றால், பல இன்னல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பல இடங்களில், சாலைகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர்.டெல்டா மாவட்டங்களில், 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உணர்ந்து, போர்க்கால அடிப்படையில், மாநில அரசு நிவாரண நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகள் மீது, தேவையற்ற அவதுாறுகளை பேசுவதை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய குழுவினரிடம், முழு நிலவரத்தை எடுத்து கூறி, தேவையான நிவாரண உதவியை பெற வேண்டும்.தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும், துயர்படும் மக்களுக்கு, உணவு, உடை, மருத்துவ வசதி போன்றவற்றை வழங்க வேண்டும்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202020:25:14 IST Report Abuse
ஆரூர் ரங் ஆக்கபூர்வம்..ன்னா கடப்பாக்கல் பிரியாணி ஆட்டய்ப் போடுறதா ? 200😎 உபீஸ்க்கு வேறெதுவும் தெரியாதே
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
06-டிச-202021:00:04 IST Report Abuse
M.Selvamர.ர க்களும் அதேதான் நண்பரே..அதை மட்டுமே இங்கே யாரும் சொல்ல என்ன வெக்கம் ?...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
06-டிச-202019:40:57 IST Report Abuse
elakkumanan சரிப்பா அய்யா, உங்கள் அப்பா தமிழ் வாட்ச்மன் ஆட்சி(பொற்கால, பதினெட்டு மணி நேர இருட்டு) கருணாநிதி ஆட்சி தொடரன்னு சொல்லி ஒட்டு கேட்க முடியுமா. உங்களிடமே உங்கள் லச்சணத்திற்கு பதிலிருக்கும்போது, எதுக்கு தெருவில் கத்துறீங்க. முடிஞ்சா, கருணாநிதி ஆட்சி தொடரன்னு சொல்லி ஒட்டு கேளுங்க. ஐயோ பாவம். மீடியாவை கையில் வைத்திருப்பதாக நினைப்பு. ஏதேதோ செஞ்சு பாக்குறாங்க. ஆனாலு, எலிக்கறி சாப்பிட்ட (முதல் திருட்டு கட்சி ஆட்சியில் பஞ்சம், பதினெட்டு மணிநேர இருட்டு) பெரும்பாலான கிராம மக்கள், திருட்டு கட்சி பெயரை கேட்டால் காத்த தூரம் ஓட இதுதான் காரணம். சொந்த பெயரில்லாமல், காசுக்கு கொமெண்ட் எழுதி வயிறு வளர்க்கும் சிறு பிள்ளைகளுக்கு இதெல்லாம் தெரியாது. தெரிஞ்சுக்கோங்க. இன்னைக்கு, விவசாயிக்கு முட்டு கொடுக்கும் இதே திருட்டு கட்சிதான், காவேரி பிரச்னையின் முழு சிக்கலுக்கும் காரணம். அன்று, இதே விவசாயி எலிக்கறி உண்டது நம்ம வரலாற்று பொற்கால ஆட்சியில்தான். இந்த நினைப்பில்தான்,(பழைய நெனப்புடா பேராண்டி) அய்யாக்கண்ணு டெல்லியில், டான்ஸ் போராட்டம் பண்ணும்போது, எலியை ஒரு ஐட்டமா செத்துக்கிட்டாரு. பழைய நெனப்பு.காசு கொடுத்தவன் சொன்னதை செய்யணும்ல...............
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
06-டிச-202020:20:15 IST Report Abuse
SaiBabaமின்சார வெட்டுத்துறை அமைச்சர் என்று ஜெயலலிதா திரும்பத்திரும்பச்சொன்னது காதுகளில் ஒலிக்கிறது...
Rate this:
06-டிச-202020:49:56 IST Report Abuse
ஸ்டாலின் ::ACCUST 1 இவர் தான் சொன்னது இன்னமும் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது இதை ஜெயா சமாதியில் ஒளி பரப்பவும்...
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
06-டிச-202022:44:30 IST Report Abuse
elakkumananஇன்னைக்கும் அவங்க பேருக்கு ஒட்டு விழுகுது நண்பா.......இருக்கும் காலத்திலேயே , நம்ம பெரு நாதியத்த பெரு...இப்போ, சொல்லவே வேணாம்..............முடியுமா நண்பா, உங்க கட்டுமரம் பேரை சொல்லி ஒட்டு கேட்க...எத்தனை கேள்வி கேட்டாலும் பதிலே சொல்லாம, மொக்கையா , மரியாதை இல்லாம, கட்சி வழக்கப்படி லாவணி பாடியே வயிறு வளக்குறீங்க நண்பா.....
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
06-டிச-202018:52:42 IST Report Abuse
Loganathaiyyan நீ அமைதியாக இரு எல்லாம் நல்லதே நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X