நியூயார்க்:''கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் துவங்கலாம்,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலர், அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுச் சபையில், கொரோனா குறித்த முதல் உயர்மட்டக் குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
இதில், உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலர், அதனோம் கேப்ரியாசெஸ் கொரோனா, மனித நேயத்தின் மிக உயரிய மாண்பையும், கோரமான முகத்தையும் ஒருசேர வெளிக்காட்ட உதவியுள்ளது. இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பூசி மருந்துகள் நன்கு பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()
|
இத்திட்டத்திற்கு உடனடியாக, 32 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு மேலும், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், பணக்கார நாடுகள், தாராளமாக இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
தடுப்பூசி மருந்து, உலகளவிலான வறுமை, பசி, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை தீர்க்காது. அவற்றுக்கு, கொரோனா பிரச்னை முடிந்த பின் தீர்வு காண வேண்டும்
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE