அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டம் தொடரும்: ஸ்டாலின் ஆவேசம்

Added : டிச 05, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
சேலம்:''புது வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்,'' என, சேலத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க., சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சேலத்தில், கட்சி தலைவர் ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:பிரச்னைடில்லியில் நடக்கும் விவசாயிகள்
 போராட்டம் தொடரும்: ஸ்டாலின் ஆவேசம்

சேலம்:''புது வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்,'' என, சேலத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க., சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சேலத்தில், கட்சி தலைவர் ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:பிரச்னைடில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு வலுசேர்க்க, இப்போராட்டத்தை, தி.மு.க., நடத்துகிறது. விவசாயிகளை, ஜனநாயகத்தை மதிக்காமல், தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை கூறி, மூன்று வேளாண் சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடக மாநில விவசாயிகள் போராடுவதால், எல்லா சாலைகளும், டில்லியை நோக்கியே உள்ளன. மசோதாவை திரும்ப பெற, விவசாய சங்கங்களை அழைத்து பேசி, பிரச்னையை தீர்க்க வேண்டும்.கடந்தாண்டு மட்டும், 10 ஆயிரத்து, 281 விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கே, இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


ஆதாரம்

தன் மீதான ஊழலை மறைக்க, '2ஜி' ஊழல், சர்க்காரியா ஊழல் என, முதல்வர் உளறுகிறார். தி.மு.க., மீதான ஊழல் நிரூபிக்கப்படவில்லை. ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை, வீட்டுக்கும் அனுப்பும் பணியில், மக்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வரப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
06-டிச-202014:34:41 IST Report Abuse
blocked user பொருமையாக போராடலாம். அடுத்து வரும் காலங்களில் நிறைய போராட வேண்டியுள்ளது...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
06-டிச-202013:26:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இங்கு கருது போட்டவன் தனிமனித விமரிசனம், வெள்ளாங் திட்டம் பற்றி பேசினார்களா, சர்க்காரியா 2 G இது தான் வேறு தெரியாது, அனால் 2G யில் அந்த நீதிபதி கொடுத்த JUDGEMENT ::O P sainy in his judgement:: THE entire case was made because of NON READING , OUT OF READING, and IVE READING of files,. மேலும் எல்லோரும் FIRST CUM FIRST SERVE என்கிற சாரத்தை கொண்டு வந்தது promod மகாஜன் தான் இவர் BJP காரன் இதை தெரியாம இங்கே உளறி கொண்டு இருக்கும் கூட்டம் தான் இவர்கள்
Rate this:
06-டிச-202021:02:31 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுபிரமோத் மகாஜன்தான் முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற திட்டம் கொண்டுவந்தார் என்கிறாய் அவர் காலத்தில் டூ ஜி அலைக்கற்றை ஒரு புதிய டேகினாலஜி ஆகவே வரவேற்பே இல்லை...
Rate this:
06-டிச-202021:05:26 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஇந்த கருத்து மூலம் நீ தான் சரியான பொருத்தமான தீம்கா அடிமை (லாஜிக்கே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு, கொடுக்குற காசுக்காக விசுவாசம்) என்பதை நிரூபித்திருக்க வாழ்க...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-டிச-202012:27:11 IST Report Abuse
கல்யாணராமன் சு.அவர் எப்பவுமே அப்படித்தான் (தீம்கா அடிமை) ........ அவர் பேச்சை ஒரு பொருட்டா எடுத்துக்காதீங்க ....... உங்க நேரந்தான் வேஸ்ட்டாகும் ..............
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
06-டிச-202013:20:16 IST Report Abuse
வல்வில் ஓரி நேற்று TWITEER ட்ரெண்ட் பார்த்தீர்கள் இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X