ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்: முஸ்லீம் கட்சி டிஆர்எஸ்க்கு ஆதரவு?

Updated : டிச 06, 2020 | Added : டிச 06, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வென்று 3ம் இடத்தில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., முஸ்லீம் கட்சி டி.ஆர்.எஸ்.,க்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் டி.ஆர்.எஸ்., கட்சி (தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி) 55 வார்டுகளில் வென்று முதலிடத்தில் உள்ளது. பா.ஜ., கட்சி 48 இடங்களில் வென்று

ஐதராபாத்: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வென்று 3ம் இடத்தில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., முஸ்லீம் கட்சி டி.ஆர்.எஸ்.,க்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



latest tamil news


நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் டி.ஆர்.எஸ்., கட்சி (தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி) 55 வார்டுகளில் வென்று முதலிடத்தில் உள்ளது. பா.ஜ., கட்சி 48 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரம் இம்முறை இத்தேர்தலில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 51 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களை கைப்பற்றி 3ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அதிக இடங்களை பிடித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி, டி. ஆர்.எஸ்., கட்சியுடன் கூட்டணி அமைக்க அக்கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. முஸ்லீம் கட்சி டி.ஆர்.எஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் துணை மேயர் பதவிக்கான கோரிக்கையை முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


கடந்த 2016 தேர்தலின் போது 99 இடஙகளை பிடித்த டி.ஆர்.எஸ்., கட்சி அக்கட்சி மீதான மக்கள் அதிருப்தி காரணமாக இம்முறை 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ., இத் தேர்தலில் 48 இடங்களையும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 44 இடங்களையும் பிடித்துள்ளது. காங்., சென்ற முறையும் இம்முறையும் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவை தொடர்ந்து, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-டிச-202018:38:19 IST Report Abuse
Bhaskaran சார்மினார் பகுதி ஒரு குட்டி பாகிஸ்தான் .பாகிஸ்தான் உளவாளிகள் இங்கே நிறைய இருக்கின்றனர் என்று தகவலுண்டு
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
06-டிச-202018:37:22 IST Report Abuse
அறவோன் ஹைதராபாத் டேஞ்ஜராபாத் (dangerabad)ஆகியிருக்கும், தப்பித்தது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-டிச-202017:49:09 IST Report Abuse
Endrum Indian 1) ஒவைசி கட்சி 44 இருந்தது 44 ஐ தக்க வைத்துக்கொண்டது 2) டி ஆர் எஸ் 99 இப்போது 55 ஆகி விட்டது 3) காங்கிரஸ் 2, 2 ஆகவே இருக்கின்றது 4) 4 இருந்த பி ஜெ பி 48 ஆகிவிட்டது . ஒவைசியும் காங்கிரசும் அதே நேர்க்கோட்டில் பயணிக்கின்றது. டி ஆர் எஸ் மாடியிலிருந்து ஒரேயடியாக கீழே தள்ளிவிடப்பட்டிருக்கின்றது பி ஜெ பி எஸ்கலேட்டரில் வெகு சுலபமாக உயரே எழும்பி விட்டது. டி ஆர் எஸ் ஆட்சி முறைக்கும் காங்கிரஸ் ஆட்சி முறைக்கும் வித்தியாசமேயில்லை ஆகவே முஸ்லீம் கட்சி இதற்கு முட்டு கொடுப்பதில் ஆச்சரியமே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X