சென்னை : ''கொரோனா காலத்திலும் மருத்துவ துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது'' என மத்திய பிரதேச மருத்துவ கல்வித் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் '108' மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை ம.பி., மருத்துவ கல்வித் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் இணைந்து பார்வையிட்டார். பின் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:புயல் நடவடிக்கையாக 8456 மருத்துவ முகாம்கள் மற்றும் 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்து உள்ளனர். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீரேற்ற நிலையங்களிலும் 'குளோரின்' கலப்பு முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கூறினார்.

அமைச்சர் விஷ்வாஸ் சாரங் அளித்த பேட்டி: கொரோனா காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மருத்துவ கல்வியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. எனவே மருத்துவ கல்வியில் தமிழகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இதற்காக தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE