பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை

Added : டிச 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.,6) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் நேற்று கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில்

சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.,6) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.latest tamil news
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் நேற்று கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக்கூடும். இதனால் தமிழத்தின் பல மாவட்டங்களிலும் இன்று (டிச.,6) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மேம்கு மாம்பலம், கிண்டி, தாம்பரம், தியாகராய நகர், சைதாபேட்டை, நங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், அனகாபுத்தூர் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


latest tamil newsசென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர், மதுரவாயல், போரூர், கொரட்டூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர், திருவேற்காடு, மாங்காடு ஆகிய பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருமயம், ஆலக்குடி, கீரமங்கலம் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் விழுப்புரம், செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழவளவு, தும்பைபட்டி மற்றும் தெற்கு தெரு ஆகிய சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202012:57:50 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan nalla malai ADMK period mattum than pyuudu ..DMK vanthal ..malai irukadu ..Rain depending upon rulers only ..disasters also depend upon rulers..
Rate this:
Cancel
06-டிச-202010:55:02 IST Report Abuse
எழில் கோரோணா காலத்துல காரு பஸ்சு ஓடாம எல்லா அணையும் நிரம்புது. அடுத்த வருஷம் தெரிஞ்சுரும், தண்ணி பஞ்சம் எப்பிடி இருக்குன்னு பாக்கலாம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-டிச-202007:24:49 IST Report Abuse
Bhaskaran Madipaakam mudichoor velacheri vaaasikal kavalaipaduvaargal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X