பொது செய்தி

இந்தியா

மும்பையில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Updated : டிச 06, 2020 | Added : டிச 06, 2020
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் பரவத் தொடங்கிய கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தது. மும்பை மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவியது. இதனால் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் இந்தியாவில் முதலாவது மாநிலமாக இருந்தது.மும்பையிலும் கொரோனா பரவல் அதிகமாக
mumbai, corona, spread, decrease, மும்பை, கொரோனா, பாதிப்பு, குறைவு



மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் பரவத் தொடங்கிய கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தது. மும்பை மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவியது. இதனால் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் இந்தியாவில் முதலாவது மாநிலமாக இருந்தது.

மும்பையிலும் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு நாட்களாக நகரில் தினசரி பாதிப்பு 1000க்கும் குறைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று அங்கு 813 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவிலிருந்து மும்பையில் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் மீண்டனர். இதுவரை மும்பையில் மட்டும் மொத்தம் 2,84,502 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.


latest tamil news


மாநில அளவில் புதிதாக 5,229 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து மஹாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 18,42,587 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 127 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதையடுத்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 47,599 ஆக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிர அரசு கொரோனா தடுப்பூசி ரெம்டெசிவர் மருந்தின் விலையை ரூ2,360 ஆக நிர்ணயித்துள்ளது. மஹாராஷ்டிரா மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X