பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு அளித்த உணவை மீண்டும் ஏற்க மறுத்த விவசாயிகள்

Updated : டிச 06, 2020 | Added : டிச 06, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்து, தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டனர்.வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டில்லி - ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் 4 கட்டங்களாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால்,
Farmers, Bring, OwnFood, Tea, Water, GovernmentMeeting, மத்திய அரசு, உணவு, விவசாயிகள்

புதுடில்லி: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்து, தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டில்லி - ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் 4 கட்டங்களாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், நேற்று (டிச.,05) மீண்டும் 5வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், விவசாய அமைப்புகளை சேர்ந்த 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


latest tamil news


போராட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு, மத்திய அரசு சார்பில் உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், மத்திய அரசு கொடுத்த தண்ணீரை கூட குடிக்காமல் தாங்கள் கொண்டுவந்த தேநீர், தண்ணீர் மற்றும் உணவை சாப்பிட்டனர்.

கடந்த 3ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போதும் இதேபோல் அரசு அளித்த உணவை ஏற்க மறுத்து தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, ‛மதிய உணவு அளித்து விருந்தளிப்பதற்கு பதில், பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துமாறு,' விவசாயிகள் பிரதிநிதிகள் கூறியிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில் திருப்பூர் wharsappல் ஒரு வீடியோ பார்த்தேன் ரோட்டிலேயே கல்யாண வீடு மாதிரி வித விதமான சமைச்சு சாப்பிடராங்க அதனால் அரசு சாப்பாடு பிடிக்காது
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
06-டிச-202020:39:30 IST Report Abuse
Mahesh சட்டம் என்ன சொல்கிறது என்பது மட்டுமல்லாமல், இந்த சட்டங்களின் தேவை என்ன என்று பலர் விளக்கியிருக்கிறார்கள். சேகர் குப்தா கூட நன்றாக விளக்கி உள்ளார். அதை கேளுங்கள்.
Rate this:
Cancel
Srinivasan Guru Murthy - BANGALORE,இந்தியா
06-டிச-202018:34:33 IST Report Abuse
Srinivasan Guru Murthy The Government should try to convince the Farmers at the very earliest or they should withdraw the new rules
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X