'ஆடி அடங்கும் வாழ்க்கையடா; ஆறடி நிலமே சொந்த மடா...'என்ற பாடலையும் அதை எழுதிய உவமை கவிஞர் சுரதாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மரபு கவிதைகளுக்கு உவமை கொடுப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. 100க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை தொகுத்தவர். இவர் கடந்து வந்த வாழ்க்கையையும், பெற்ற புகழையும் பறைசாற்றும் விதமாக, 'சுரதா என் ஆசான்' என்ற நுாலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் இவரது சீடர் நாமக்கல் நாதன்.
இதுகுறித்து, அவரிடம் பேசினோம்...
பெருமாநல்லுாரில் வசிக்கிறேன். இது வரை, 35 நுால்கள் எழுதியுள்ளேன். என் கவிதைத்துறை ஆசானான சுரதாவிற்கு பெருமை சேர்க்க இந்த நுாலை எழுதியுள்ளேன். தமிழ் பற்று, இலக்கிய ஆற்றல் என பிரமிக்க வைக்கும் அவரின் கவிதை வரிகள் இன்றும் நமக்கு ஒரு புத்துணர்ச்சியே.அவரது கவிதையும், திரைப்பாடல்களும் நுாற்றாண்டை கடந்து தமிழுக்கு உரம் சேர்ப்பவை. உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி தமிழ். இதன் தாக்கம் அனைத்து மொழிகளிலும் உண்டு.
செழுமையான இலக்கிய பங்களிப்பு இன்றைய நவீன தமிழ் இலக்கியம் வரை தொடர்கிறது.கவிதையோ இலக்கிய படைப்போ எழுதுவது நல்ல மொழிப்பயிற்சியாகும். வாழ்க்கையின் தொழில்சார்ந்த கல்விக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் மொழிப்பயிற்சியும், தாய்மொழி பயன்பாடும் மிகவும் அவசியம். இதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாழும் படைப்பாளர்கள் வரிசையில், அண்ணாமலை பல்கலையும், மலேசிய பல்கலையும் இணைந்து, 'நற்றமிழருவி நாமக்கல் நாதனார்' என்ற நுாலை வெளியிட்டு இவரை கவுரவித்துள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement