நவீன தமிழ் படைப்பிலக்கிய தளத்தில், தனித்துவமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் சு.வேணுகோபால். நாவல், குறுநாவல், சிறுகதைகள் என, 18 நுால்களை எழுதி இருக்கிறார். பாரதிய பாஷா விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விருது, கேரள மாநில கல்ச்சுரல் சென்டர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். அவரிடம் நடத்திய கலந்துரையாடலில் இருந்து!
இந்த ஊரடங்கு காலம் உங்களுக்கு எப்படி பயன்பட்டது?
வீட்டுக்கு வரும் நண்பர்களை உட்கார வைத்து இயல்பாக பேச முடியவில்லை. மற்றபடி, நிறைய படித்தேன், நிறைய எழுதினேன்.
என்ன புத்தகங்கள் படித்தீர்கள்?
கோவை ஞானி உங்களின் நெருக்கமான நண்பர். அவரது மறைவு உங்களை எவ்வாறு பாதித்தது?
நான் எழுத துவங்கிய காலத்தில், தேனியில் இருந்து அவரை சந்திக்க, கோவைக்கு வருவேன். ஒரு வாரம் அவர் வீட்டில் தங்கி இருந்து உரையாடுவேன். அவர் விரும்பும் நுால்களை வாசித்து சொல்வேன்.நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கிய திறனாய்வாளர் அவர். அவரிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். அவர் இறப்பதற்கு, 25 நாட்களுக்கு முன் சந்தித்த போது, நீண்ட நேரம் மவுனமாக இருந்த அவர், ''வேணுகோபால் உங்க திறனாய்வு கட்டுரைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு,'' என்றார். அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.
தமிழ் புதுக்கவிதை வரலாறு குறித்து, ஒரு நுால் எழுதிக் கொண்டிருந்தீர்கள். அது என்னவானது?
தமிழ் கவிதைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?
அடுத்து என்ன எழுதுவதாக திட்டம்?
ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல், பெரிய நாவலை எழுத திட்டமிட்டு இருக்கிறேன். அதில் கடந்த நுாறு ஆண்டு கால மாற்றத்தை சொல்ல வேண்டும். விவசாய மாற்றம், சமுக மாற்றம், கல்வி மாற்றம் என, கடந்த நுாற்றாண்டில் நடந்த பல கலாசார மாற்றங்களை அந்த நாவலில் எழுத திட்டமிட்டு இருக்கிறேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE