லண்டனில் மஞ்சள் மாத்திரை: ‛நியூட்ரிஷன் மாடல்' அனுஷா

Added : டிச 06, 2020
Share
Advertisement
வெண்ணிலவின் வெண்மையில் விளைந்த பருவம்... வில்லென வளைந்த புருவங்களுக்கு எத்தனை கர்வம்... அழகில் மயக்கும் மூக்கின் நுனி பெர்முடா முக்கோணம், இனிப்பில் இழுக்கும் இதழ்களில் இறங்கும் வரி கோலம், நிறம் மாறாமல் தினம் பூக்கும் பூச்செண்டு, உனக்காக ஒவ்வொரு நொடியும் துடிக்குமே பிக்பென் மணிக் கூண்டு...என வர்ணிக்க துாண்டும் லண்டன் நியூட்ரிஷன், மாடல் அனுஷா நாயர் மனம்
லண்டனில் மஞ்சள் மாத்திரை:  ‛நியூட்ரிஷன்  மாடல்'  அனுஷா

வெண்ணிலவின் வெண்மையில் விளைந்த பருவம்... வில்லென வளைந்த புருவங்களுக்கு எத்தனை கர்வம்... அழகில் மயக்கும் மூக்கின் நுனி பெர்முடா முக்கோணம், இனிப்பில் இழுக்கும் இதழ்களில் இறங்கும் வரி கோலம், நிறம் மாறாமல் தினம் பூக்கும் பூச்செண்டு, உனக்காக ஒவ்வொரு நொடியும் துடிக்குமே பிக்பென் மணிக் கூண்டு...என வர்ணிக்க துாண்டும் லண்டன் நியூட்ரிஷன், மாடல் அனுஷா நாயர் மனம் திறக்கிறார்...


லண்டன் வாழ்க்கை எப்படி இருக்கிறது

பிறந்தது கேரளா, வளர்ந்தது கன்னியாகுமரி, கிளினிக்கல் நியூட்ரிஷன் படித்த பின் பிஎச்.டி., படிக்க நினைத்த போது லண்டன் உணவு நிறுவனம் ஒன்றில் நியூட்ரிஷன் வேலை கிடைத்தது. இப்போது லண்டன் அரசு மருத்துவமனையில் சேர பயிற்சி பெறுகிறேன். 7 ஆண்டு லண்டன் வாழ்க்கை நல்லா தான் இருக்கு


நியூட்ரிஷன் அனுஷாவுக்கு மாடலிங் வாய்ப்புகள் எப்படி

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் என் போட்டோக்கள் பார்த்து இங்குள்ள போட்டோகிராபர்கள் அவங்க புராஜக்ட்டுகளில் மாடலாக்கினர். அவர்கள் இந்திய பெண்களை மாடலாக தேடிய போது நிறைய வாய்ப்புகள் வந்தது.


மாடலிங் என்றாலே அடுத்தது சினிமா தானே நீங்களும்...

நடிக்க வாய்ப்பு வந்தும் ஆர்வமில்லை. லண்டன் தமிழர்கள் எடுத்த 2 குறும்படங்களில் நடித்தேன். இங்குள்ள மேக்கப் ஆர்டிஸ்ட் தங்கள் திறமையை காட்ட சினிமா ஹீரோயின் மேக்கப் செய்வாங்க. நான் 'பாகுபலி' அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், 'மகாநடி' சாவித்திரி, சரோஜா தேவி, தேவதாசி மேக்கப் பண்ணியிருக்கேன்.


நீங்கள் பேஷன் ஷோ, ரேம்ப் வாக் எல்லாம் போவீங்களா

இல்லை, மாடலிங்கில் பல வகை இருக்கு. நான் பிரின்ட் மாடல் தான். போட்டோ ஷூட் பப்ளிஷ் பண்றதோட சரி. பேஷன் ஷோ, ரேம்ப் வாக் போறதில்லை. லண்டன், கேரளா மேகஸின்களில் என் போட்டோக்கள் வந்திருக்கு.சாரீ, நகை கடைகளுக்கு மாடலிங் பண்றேன்.


நாடு விட்டு நாடு... சில நேரங்களில் நெருங்கும் நினைவுகள்

அம்மா, அப்பா நினைவுகள் நெருங்கும். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வரவே முடியலை. சொந்த ஊரில் வேலை செய்யும் திருப்தி இங்கு இல்லை. அதனால், இனி ஊருக்கு வரும் போது கிராம மக்களுக்கு நியூட்ரிஷன் ஆலோசனை வழங்க போறேன்.


பேரழகியாக காட்சி தரும் உங்கள் டெய்லி டயட்

காலை சுடு தண்ணீர், சர்க்கரை இல்லாத இஞ்சி டீ, கார்ப்போ ஹைட்ரேட் குறைந்த பிரட், பீ நட் பட்டர், இடையில் சீரக தண்ணீர், ஜூஸ்,மதியம் கிரில்டு சிக்கன்,காய்கறிகள், கொஞ்சம் சாதம், மாலை டீ, இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன் நட்ஸ், மில்க், ஓட்ஸ், இரவில் மீன், காய்கறி. சில நேரம் நம்மூர் சத்து மாவும் சாப்பிடுறேன்.


லண்டனில் கொரோனா வைரஸ் அலை எப்படி இருக்கிறது

பள்ளி, கல்லுாரிகள் திறந்ததால் கொரோனா இரண்டாம் அலை வந்து விட்டது. மாஸ்க், சானிடைசர் அணியாவிட்டால், பிறர் வீட்டிற்கு சென்றால் அபராதம் என கட்டுப்பாடு உள்ளது. பலர் வீட்டில் இருந்து தான் வேலை செய்றாங்க. நம்மூரின் மருத்துவ குணமுள்ள மஞ்சளை இங்கு மாத்திரையாக சாப்பிடுறாங்க. நான் சமையலில் மஞ்சள் அதிகம் சேர்க்கிறேன்.

ஸ்ரீனி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X