சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : டிச 06, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பாதுகாக்கும் 'இன்ஹேலர்'ஆஸ்துமா உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட 30% கொரோனா வாய்ப்பு குறைவு. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் 'இன்ஹேலர்' காரணமாக இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்., - ஜூன் வரை கொரோனா பரிசோதனை செய்த 37,469 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் 2266 (6 சதவீதம்) பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் 153 (6.75 சதவீதம்)

அறிவியல் ஆயிரம்
பாதுகாக்கும் 'இன்ஹேலர்'

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட 30% கொரோனா வாய்ப்பு குறைவு. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் 'இன்ஹேலர்' காரணமாக இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்., - ஜூன் வரை கொரோனா பரிசோதனை செய்த 37,469 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் 2266 (6 சதவீதம்) பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் 153 (6.75 சதவீதம்) பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டனர். 37,469 பேரில், கொரோனா நெகட்டிவ் ஏற்பட்டவர்களில் 3388 (9.5%) பேர் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள்.

தகவல் சுரங்கம்
விமான போக்குவரத்து தினம்

உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக டிச.7ல் சர்வதேச விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உலக விமான போக்குவரத்து வளர்ச்சிக்கு நவீன கண்டுபிடிப்பு ' என்பது 2023ம் ஆண்டு வரை இத்தினத்தின் மையக்கருத்தாக உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து கழகம் 1944ல் தொடங்கப்பட்டது. இதன் 50வது ஆண்டுவிழாவின் போது இத்தினம் உருவாக்கப்பட்டது. உலகில் ஆண்டுக்கு 400 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். நாள்தோறும் 1.20 லட்சம் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X