அடுத்து தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க பா.ஜ., இலக்கு: மாநகராட்சி தேர்தல் வெற்றியால் புது நம்பிக்கை

Updated : டிச 08, 2020 | Added : டிச 06, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கும், இரண்டாம் இடம் பிடித்த, பா.ஜ.,வுக்கும் இடையே, 10 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதையடுத்து, அம்மாநில பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. 2023 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, இதை முன்னோட்டமாக பா.ஜ.,வினர் கருதுகின்றனர். அதற்கான
தெலுங்கானா, ஆட்சி, பாஜ, இலக்கு, மாநகராட்சிதேர்தல், வெற்றி, நம்பிக்கை,ஐதராபாத்,  தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி,

ஐதராபாத்: தெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கும், இரண்டாம் இடம் பிடித்த, பா.ஜ.,வுக்கும் இடையே, 10 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதையடுத்து, அம்மாநில பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. 2023 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, இதை முன்னோட்டமாக பா.ஜ.,வினர் கருதுகின்றனர். அதற்கான திட்டத்தையும் தயார் செய்துள்ளனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடக்கிறது.இங்கு, 150 வார்டுகளை உடைய ஐதராபாத் மாநகராட்சிக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 150, பா.ஜ., 149, காங்கிரஸ், 146, தெலுங்கு தேசம், 10, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 51 இடங்களில் போட்டியிட்டன.


கவுரவ பிரச்னை


இந்த தேர்தலை சாதாரணமாக கருதாமல், கவுரவ பிரச்னையாக கருதி, பா.ஜ., தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பா,ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஐதராபாதில் சூறாவளி பிரசாரம் செய்தனர். அமித் ஷாவின் பிரசாரத்துக்கு கூடிய கூட்டம், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினருக்கு கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தேர்தல் முடிவுகள், கடந்த, 4ல் வெளியானது.

இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 55 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 48 இடங்களில் வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மொத்தம், 12.06 லட்சம் ஓட்டுக்கள் பெற்றன. இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., 11.95 லட்சம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே, வெறும், 10 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே வித்தியாசம் என்பது, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் குமார் கூறியதாவது: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு, முன்கூட்டியே நடத்திவிட்டது. அதனால், சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க கூட எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.


வெற்றி வாகை


அதற்கான நேரம் கிடைத்திருந்தால், 100 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். தெலுங்கானா சட்டசபையை, 2023ல் கைப்பற்றுவதே எங்கள் அடுத்த இலக்கு. அதற்கான பணிகளில் ஏற்கனவே ஈடுபட துவங்கி விட்டோம். அதற்கான திட்டங்களையும் தயார் செய்துள்ளோம். தேர்தல் நெருங்கியதும், எங்களின் திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தி, வெற்றி வாகை சூடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மாநகராட்சி தேர்தலில், 'ஐதராபாத் நகரின் பெயரை, பாக்யாநகர் என மாற்றுவோம், இங்கு குடியேறியுள்ள ரோஹின்யா முஸ்லிம்களை வெளியேற்றுவோம்' என்பது உள்ளிட்ட, பா.ஜ.,வின் வாக்குறுதிகள், அவர்களுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.மேலும், ஆளும் கட்சி மற்றும் கவுன்சிலர்கள் மீதான அதிருப்தியும் சேர்ந்து, பா.ஜ.,வுக்கு அதிக இடங்களை பெற்று தந்ததாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


அதிருப்தி

ஐதராபாதில், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், கடுமையான சேதங்களை சந்தித்த, பகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநில அரசு, தலா, 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அளித்த நிலையிலும், அந்த தொகை, முழுமையாக மக்களை சென்று சேராத காரணத்தால், சந்திரசேகர ராவ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆளும் அரசு மீது மக்களுக்கு இருந்த கோபம், பா.ஜ.,வுக்கான ஓட்டாக மாறியுள்ளதாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், பா.ஜ., வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான தொகுதிகள், ஆளும் கட்சியின் கோட்டை என கூறப்படுகிறது. ராம்நகர், காந்திநகர், கச்சிகுடா, நல்லகுண்டா, பாக் ஆம்பர்பேட், முஷீராபாத் ஆகிய இடங்களில், தீவிர தெலுங்கானா ஆதரவாளர்கள் வசிக்கின்றனர். தனி தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பலர், இப்பகுதியை சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில், அந்த இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியுள்ளது, கட்சியினர் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும், செரிலிங்கம்பள்ளி, ஜூப்ளி ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றுள்ளது. பொதுவாக, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.,வுக்குஓட்டளிப்பது வழக்கம். இம்முறை, ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி, சந்திரசேகர ராவை ஆதரித்ததால், அவர்கள் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர் என கூறப்படுகிறது.தெலுங்கானாவில், தற்போது மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் செயலற்று உள்ளதால், அவர்கள் இடத்தை, பா.ஜ., நிரப்பி வருவதாக கருத்து நிலவுகிறது. இதற்கிடையே, நடந்து முடிந்துள்ள மாநகராட்சி தேர்தல் முடிவுகள், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு மாற்று, பா.ஜ., தான் என்ற எண்ணத்தை, மக்கள் மனதில் வலுவாக விதைத்துள்ளதாக, நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
07-டிச-202018:25:05 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை ஆக, ஒட்டு மொத்த பாரத்தையும் நாசம் செய்யறீங்க.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
07-டிச-202012:27:14 IST Report Abuse
Raj இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வோட்டு சீட்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07-டிச-202008:33:27 IST Report Abuse
VENKATASUBRAMANIAN வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் எதிர் கட்சிகள் உள்ளன. இப்போது EVM என்று பொய் சொல்லமுடியதே. வாக்கு சீட்டு மேலும் குறை சொல்ல முடியாது. இப்போது புரியும் திமுக காங்கிரஸ் திருமா போன்ற கட்சிகள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X