தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ்
கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போதைக்கு உள்ளது. ஆனால் இந்த
கூட்டணி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக, டில்லி காங்கிரஸ்
வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்
திருமாவளவன், மூன்று முறை ராகுலிடம் ரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக
கட்சியினர் கூறுகின்றனர். 'கூட்டணிக் கட்சிகள் தி.மு.க., தேர்தல்
சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என, அந்த கட்சி மேலிடம்
கட்டாயப்படுத்துவதால், சில கட்சிகள் வெளியே போகலாமா என யோசிப்பதாக
தெரிகிறது. காங்கிரசுக்கும் குறைவான தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என
கூறப்படுவதால், காங்., - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி உருவாகலாம் என
பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், திருமாவளவன் - ராகுல் பேச்சு,
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 'இப்போதைக்கு, தி.மு.க., கூட்டணியில் தான்
இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சு நடக்கும். இப்போதைய
நிலை இது தான்; ஆனால் பின்னால் என்ன நடக்கும் என இப்போது எப்படி சொல்ல
முடியும்' என, பொடி வைத்து பேசுகின்றனர், காங்கிரஸ் தலைவர்கள். 'காங்கிரசுக்கு வேறு போக்கிடம் இல்லை; இதெல்லாம் சும்மா ஒரு மிரட்டல் தான்'
என, தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE