கொரோனாவிற்கு எப்போது தடுப்பூசி வரும் என,
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். நம் நாட்டிலும், இந்த மாத
இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வரும் என, சொல்லப்படுகிறது.
தடுப்பூசி
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு, பிரதமர் நேரில் சென்று
பார்வையிட்டு உள்ளார். விமானத்தை பயன்படுத்தி, தடுப்பூசியை நாடு முழுதும்
உள்ள மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கும் திட்டமும் தயாராகிவிட்டது.
சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும், யார் யாருக்கு முதலில்
தடுப்பூசி கிடைக்கும் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இம்மாதம், 25ல்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள். அன்று திடீரென பிரதமர் மோடி,
'டிவி' யில் தோன்றி, தடுப்பூசி குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என,
டில்லி அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது
எதிர்க்கட்சிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஒரு விவகாரத்திலும்,
தங்கள் அரசுக்கு பெருமை தேடிக் கொள்கிறார் பிரதமர் என நொந்து
போயுள்ளனர்.இதனால் அடிக்கடி, 'கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு
வர மோடி தவறிவிட்டார்' என, 'டுவிட்' செய்து, தன் கோபத்தை வெளிப்படுத்தி
வருகிறார் ராகுல்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE