பொங்கலுார்:பொங்கலுார் பகுதியில் தொடரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.கடந்த மாதம் 24ல், எஸ்.வேலாயுதம்பாளையம், காட்டூர் மாரியம்மன் கோவில்களில், வெள்ள நத்தம் கரிய காளியம்மன் கோவில் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவிலில் நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.கடந்த மாத இறுதியில், பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில் விளையாட்டுச் பொருட்கள் வைத்திருந்த அறைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதில் மாணவர்களின் பழைய டி.சி., மற்றும் விளையாட்டு பொருட்கள் சாம்பலாயின. ஏ.எல்.ஆர்., லே--அவுட்டில் உள்ள செல்வவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த மணியை திருடிச் சென்றனர்.இம்மாதம், பொங்கலுாரில் ஒரு ஸ்டேஷனரி கடை, மளிகை கடையில் கொள்ளை நடந்தது. நேற்று முன்தினம் கொடுவாய் ஈஸ்வரன் கோவிலில் வெள்ளிப்பட்டை, ஹார்ட் டிஸ்க் மானிட்டர் ஆகியவை திருடப்பட்டன.பொங்கலுார் சுற்று வட்டாரத்தில் திருடும் மர்ம நபர்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்வதோடு, ரோந்து மற்றும் கண்காணிப்பை போலீசார் அதிகரிக்க வேண்டும் என்கின்றனர், பொதுமக்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE