அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு

Updated : டிச 06, 2020 | Added : டிச 06, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிச.,8ம் தேதி விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய பாரத் பந்தில், மக்கள் நீதி மையம் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி ஹரியானா எல்லையில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மத்திய
mayam, kamal, Bharat Bandh, kamal haasan, MNM, farmers

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிச.,8ம் தேதி விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய பாரத் பந்தில், மக்கள் நீதி மையம் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி ஹரியானா எல்லையில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மீண்டும் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வரும் 8 ம் தேதி விவசாய சங்கத்தினர் , நாடு முழுவதும் ‛பாரத் பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, இடதுசாரிகள், திமுக , சமாஜ்வாதி , திரிணமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


latest tamil news



இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியும் பந்தில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் குரலுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், மக்கள் நீதி மையம் டிசம்பர் 8ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என பதிவிட்டுள்ளார்.


சிவசேனா பங்கேற்பு:

விவசாயிகளின் பாரத் பந்த்தில், சிவசேனா கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
07-டிச-202019:51:32 IST Report Abuse
sankar ஆக - என் கட்சியில் உள்ள பதினெட்டுப்பேரும் பங்கெடுப்பார்கள்
Rate this:
Cancel
Sethu Thangavelu - Chennai,இந்தியா
07-டிச-202019:16:53 IST Report Abuse
Sethu Thangavelu கமல் வளரும் சிவாஜி ...
Rate this:
Cancel
Prabhagharan - Madurai,ஓமன்
07-டிச-202014:13:20 IST Report Abuse
Prabhagharan மையத்தில் உள்ள ஒரே தொண்டர் & ஒரே தலைவர் நீங்கள் தான், நீங்கள் பிக் பாசில் பிஸி,எப்படி கலந்து கொள்வீர்கள்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X