திருவனந்தபுரத்தில் உள்ள ராஜிவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வாக்கரின் பெயரை வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, ஏதாவது ஒரு இந்திய விஞ்ஞானியின் பெயரை வைக்கலாம். மத்திய அரசு, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பினராயி விஜயன்கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முடிந்தால் கைது செய்யுங்கள்!
விவசாயிகளுக்காக குரல் கொடுத்த எங்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோழையான நிதிஷ் குமார் அரசு, முடிந்தால் என்னை கைது செய்யட்டும். இல்லையெனில், நானே சரணடைகிறேன். விவசாயிகளுக்காக துாக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்.
தேஜஸ்வி யாதவ்தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
துரோகம் இழைத்தவர்கள்!
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, அகாலி தளத்தின், 'பாதல்'கள், அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளனர். பாதல்களைப் போல் முதுகெலும்பு இல்லாதவன், நான் அல்ல; நான், அவர்களைப் போல் துரோகிகள் அல்ல.
அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர், காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE