பல்லடம்:பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பயன்பாடின்றி துருப்பிடித்து கிடந்த அரசு ஜீப்பை கடந்த சில தினங்களுக்கு முன் துாய்மை செய்த தன்னார்வலர் கனகராஜ், ஜீப்பினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தாரிடம் மனு கொடுத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பயன்பாடின்றி துருப்பிடித்து கிடக்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் தனிப்பிரிவுக்கு கனகராஜ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.''பல்லடம் தாலுாகா அலுவலகத்தில் அரசு ஜீப் ஒன்று பல மாதங்களாக பயன்பாடின்றி துருப்பிடித்து கிடக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஏராளமான வாகனங்கள் பயன்பாடின்றி துருப்பிடித்து கிடக்கின்றது.அவற்றை பழுதுபார்த்து பயன்படுத்தவோ, அல்லது பொதுமக்களுக்கு ஏலம் விடவோ முயற்சிக்க வேண்டும். பயன்படுத்தாமல் கிடக்கும் வாகனங்களால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE