திருப்பூர்:திருப்பூரில், பேக்கரி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகளில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் தங்கவேல், கேசவராஜ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.சில கடைகளில் இருந்து, காலாவதி குளிர்பானங்கள், தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.மூன்று கடைகளில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததன் பேரில், 5 ஆயிரம் ரூபாய்; இரு கடைகளில், பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.எம்.எஸ்., நகரில், மொத்த விற்பனை கடை ஒன்றில் சாயம் கலந்த டீத்துாள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் மாதிரி சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE