திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலைக் கல்லுாரியில் கட்டப்பட்ட செல்வ வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு புனர் பூஜைகள், இரண்டாம் கால யாக வேள்விகள் நடந்து, கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு கோவிலின் மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மூலவர் செல்வ வித்யா கணபதிக்கு கலசாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கல்லுாரி தலைவர் செல்வராஜ், செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்தாக் அகமது, தாளாளர் பழனிராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் சத்தியநாராயணன், வெங்கடேசன், சாந்தி அம்மாள், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE