சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10.20 லட்ச ரூபாயில், 400 சதுர அடி பரப்பளவு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தை, தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை, குடிசைப் பகுதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி ஒதுக்கி வந்தது. தற்போது, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதில் அடுக்குமாடி வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்கும் திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்படுத்த உள்ளது.
இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த தைலாவரம் பகுதியில், புதிய திட்டத்தை குடிசை மாற்று வாரியம் செயல்படுத்துகிறது.தலா, 400 சதுர அடி பரப்பளவில், 480 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இந்த வீடுகளை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய, குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது.இந்த வீடுகளுக்கு, 11.70 லட்சம் ரூபாய் தோராய விலையாக முடிவு செய்யப்பட்டது. இதில், மத்திய அரசின் மானியம், 1.50 லட்ச ரூபாய்.
இதனால், 10.20 லட்ச ரூபாயை, ஆறு தவணைகளில் செலுத்தலாம்.இந்தியாவில் வேறு எங்கும், தன் பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ சொந்தமாக வீடு, மனை இல்லாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.குடிசை மாற்று வாரியத்தின், www.tnscb.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என, வாரியம் அறிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE