பல்லடம்:சாமளாபுரம் பேரூராட்சி, பள்ளபாளையம் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. சங்க வளாகத்தில் இருந்த பழமையான ஆலமரம், சவுக்கு, வேம்பு ஆகிய மரங்கள் வெட்டப்பட்டன.பொதுமக்கள் கூறியதாவது:பழமையான மரங்கள் நேற்றுமுன்தினம் வெட்டப்பட்டுள்ளன. சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, 'நாங்கள் கூட்டத்தில் முடிவு செய்த பின்பே வெட்டுகிறோம். வேர்ப்பகுதி வெட்டப்படவில்லை.மரங்கள் இருப்பதால், விஷ ஜந்துக்கள் வருகின்றன; இதனால் வெட்டினோம்' என்றனர்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த பிப்., மாதம் இதேபோன்று வளாகத்தில் இருந்த பழமையான ஆலமரம் வெட்டப்பட்டது.தற்போது மீண்டும் அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டு பொருத்த மற்ற காரணங்களை கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மரம் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.வி.ஏ.ஓ., இளம்பரிதி கூறுகையில், 'மரங்களை வெட்ட அனுமதி பெறவில்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வெட்டியதாக கூறுகின்றனர். தாசில்தார் ஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE