பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முப்படை வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Added : டிச 06, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க மாவட்ட தலைவர் கேப்டன் துரைசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருணாச்சலம், செயலாளர்கள் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.கூட்டத்தில்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க மாவட்ட தலைவர் கேப்டன் துரைசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருணாச்சலம், செயலாளர்கள் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இருப்பதால், முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் புதிதாக அமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து அலுவலக பணி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு விழுப்புரம் செல்ல வேண்டியுள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென புதிதாக ராணுவ மருத்துவமனை மற்றும் கேண்டீன் ஆகியவற்றை ஒரே வளாகத்தில் அமைத்து தருமாறும், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகத்தில் ராணுவ வீரர்களின் நலத்திற்கென அலுவலகம் அமைக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் அய்யாசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X