திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு பகுதியில், நீண்ட நாட்கள் இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.- எஸ்.கருணாகரன், கோல்டன் நகர்.ரோட்டில் 'குளம்'திருப்பூர், தமிழ்நாடு தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் மழை பெய்தால், ரோட்டிலேயே தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கிறது.- ஆர்.கணேஷ், வித்யாலயம்.பார்த்தாலே 'ஷாக்'திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில், பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.- எம்.சரவணன், கொங்குமெயின்ரோடு.வீணாகும் குடிநீர்மண்ணரை அடுத்த சத்யா காலனி ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகிறது.- ஏ.பாண்டியன், மண்ணரை.நெரிசல் சகஜம்பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் மற்றும் நொச்சிபாளையம் பிரிவில், சிக்னல் அமைக்கப்படாததால் தொடர்ந்து வாகன நெரிசல் காணப்படுகிறது.- என்.வெங்கடாச்சலம், அருள்புரம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE