சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடம் சேதம் அதிகாரிகள் அதிர்ச்சி

Added : டிச 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை, அ.ம.மு.க.,வினர் சேதப்படுத்தியதால், பொதுப்பணித் துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 50.8 கோடி ரூபாயில், சென்னை, மெரினாவில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு, ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், பீனிக்ஸ் பறவை வடிவில், முழுதும் கான்கிரீட் பயன்படுத்தி, பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டு

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை, அ.ம.மு.க.,வினர் சேதப்படுத்தியதால், பொதுப்பணித் துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 50.8 கோடி ரூபாயில், சென்னை, மெரினாவில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு, ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், பீனிக்ஸ் பறவை வடிவில், முழுதும் கான்கிரீட் பயன்படுத்தி, பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.இந்த கட்டடத்தை சுற்றி, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளதுடன், அழகிய புல்வெளிகள், பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

நினைவிடத்தை திறப்பு விழாவிற்கு தயார்படுத்தும் வகையில், இரவு, பகலாக பொதுப்பணித் துறையினர்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.இந்நிலையில், ஜெ., நினைவு தினம், நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், அங்கு வந்து, அஞ்சலி செலுத்தி சென்றனர். தொடர்ந்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அஞ்சலி செலுத்த, தன் பிரசார வாகனத்திலேயே வந்தார். அவருடன் ஏராளமான அ.ம.மு.க.,வினரும் வந்தனர். பீனிக்ஸ் கட்டடத்திற்குள் முண்டியடித்து தொண்டர்கள் சென்றனர்.இவர்களால், அங்கிருந்த பூச்செடிகள், புற்செடிகள் சேதம் அடைந்தன. இதனால், அவற்றை மீண்டும் நடவு செய்ய வேண்டிய நிலை, பொதுப்பணித் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
07-டிச-202007:44:35 IST Report Abuse
natarajan s செய்தியை படித்தவுடன் ஏதோ நினைவிடத்தை சேதம் செய்து விட்டார்கள் போல் இருந்தது, பூ தொட்டி சேதம் ஆகி உள்ளது, இதற்க்கு இப்படி ஒரு செய்தியா ? இவர்களால் நாடே சேதமாகி உள்ளது அது பற்றி எல்லாம் செய்தி போடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X