தமிழ்நாடு

தமிழக அரசின் உழவர் அலுவலர் தொடர் திட்டம்! பயன்பெற தோட்டக்கலை துறை அழைப்பு

Added : டிச 06, 2020
Share
Advertisement
.விழுப்புரம் : தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்புத்திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு உழவர் அலுவலர் தொடர்புத்திட்டம் என்ற திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளில் நிரந்தர பயண

.விழுப்புரம் : தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்புத்திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு உழவர் அலுவலர் தொடர்புத்திட்டம் என்ற திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளில் நிரந்தர பயண திட்டத்தின் படி, 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வலுவலர்கள், விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல்விளக்கங்கள் நடத்தியும், பயிற்சிகள் அளித்தும், பண்ணைப்பள்ளிகள் மூலமும், கண்டுணர்வு சுற்றுலாக்கள் மூலமும் நவீன தொழில் நுட்பங்களையும், திட்டங்கள் செயல்பாடுகளையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள்.

ஓவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை (இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் 2 பேர் உட்பட) தேர்வுசெய்து, அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

இது தொடர்பான பயணத்திட்டம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பாக விவசாயிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். நடப்பு ஆண்டில் நவம்பர் 23 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உதவி தோட்டக்கலை அலுவலர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையும், தோட்டக்கலை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர்கள் மாதம் ஒரு முறையும் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குவர்.விரிவாக்க அலுவலர்கள் தங்களது கிராமப் பயணங்களை வாரத்தில் 4 நாட்கள் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5;00 மணி வரை மேற்கொள்வர். தவிர்க்க முடியாத காரணங்களால் விடுபட்ட கிராமங்களுக்கு சனிக்கிழமையில் பயணம் மேற்கொள்ளப்படும்.

மேலும், வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலம் குழுக்களை உருவாக்கி முக்கியமான தொழில் நுட்பங்கள், செய்திகளை விவசாயிகள் அறிந்திடும் வண்ணம் செயல்படுத்தப்படும். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையும், தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மாதம் ஒரு முறையும் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குவர்.

எனவே விவசாயிகள், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இந்த உழவர் அலுவலர் தொடர்புத் திட்டத்தில் பங்கேற்று தங்கள் கிராமத்திற்கு வருகைபுரியும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆலோசனைகளையும், தொழில்நுட்பங்களையும், பயிற்சிகளையும் மற்றும் அரசு நலத்திட்டங்களையும் சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.என விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X